உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

காளான் புலவு:

 


தேவையானப் பொருட்கள்

  • பாஸ்மதி அரிசி- 7 கப்
  • காளான் - 1 கிலோ
  • இஞ்சி விழுது- 75 கிராம்
  • பூண்டு விழுது- 75 கிராம்
  • பச்சை மிளகாய் விழுது- 50 கிராம்
  • வெங்காயம்- அரை கிலோ
  • நெய்- கால் கிலோ
  • பொடியாக அரிந்த கொத்தமல்லி- 2 கப்
  • தயிர்- கால் கப்
  • தேவையான உப்பு
  • தேங்காய்ப்பால்- 1 கப்
  • கீழ்கண்டவைகளை பொடிக்கவும்:
  • பட்டை- 4 துண்டுகள், கிராம்புகள்-8, ஏலக்காய்கள்- 10, சோம்பு- 1 மேசைக்கரண்டி

செய்முறை

  • வெங்காயத்தை நீளமாக மெலிசாக அரிந்து கொள்ளவும்.
  • நெய்யை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • அதன் பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  • மசாலாப்பொடியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  • காளான்களை நன்கு கழுவிச் சேர்த்து சிறிது உப்பு, தயிர், கொத்தமல்லி சேர்த்து அவை வேகும்வரை நன்கு வதக்கவும்.
  • தேங்காய்ப்பால், தண்ணீர் 13 கப், தேவையான உப்பு சேர்த்து கொதி வருமுன் அரிசியையும் கழுவிச்சேர்க்கவும்.
  • முக்கால்வாசி அரிசி வெந்து, தண்ணீர் சுண்டியதும் புலவை ' தம்' மில் வைக்கவும்.


comments
Yummmy....
மார்ச் 5, 2008 - 2:33am - வழங்கியவர் umaranis

Sounds very Tasty....
but the quantity looks quiet high.....

With Love
Animma

மிக்க நன்றி
மே 14, 2008 - 8:13pm - வழங்கியவர் Priya82

நன்றாக இருந்தது. மிக்க நன்றி. நான் தேங்காய் சேர்க்க வில்லை. அமெரிக்காவில் நல்ல தேங்காய் கிடைப்பது அரிது. சுவை அருமையாக இருந்தது.

அன்புள்ள ப்ரியா!
மே 15, 2008 - 1:32am - வழங்கியவர் Mrs.Mano

காளான் பிரியாணி சுவையாக இருந்தது என்ற பாராட்டுதல்கள் மிக்க மகிழ்வைத்தந்தது. தங்களுக்கு என் அன்பான நன்றி!

சிக்கன் பிரியாணி
மே 15, 2008 - 6:04pm - வழங்கியவர் Priya82

Dear Mano,
அமெரிக்கவில் சிக்கன் பிரியாணி எப்படி இங்குள்ள பொருட்களை வைத்து சுவையாக செய்வது? தயவு செய்து உதவவும். WALMARTல் எந்த சிக்கன் வாங்குவது? சில பொருட்கள் இங்கு கிடைப்பதில்லை.

WALMARTல் எந்த
மே 15, 2008 - 10:55pm - வழங்கியவர் rumya

WALMARTல் எந்த சிக்கன் வாங்குவது?
Walmart you can buy cut up whole chicken. Always buy good quality fresh chicken. You have to watch for Expiration date for the freshness of the chicken and the due date of the chicken atleast week away from the current date of the purchase.It is usually shown on the top of the pkg.Since my family likes chicken legs so I buy chicken legs also.
சில பொருட்கள் இங்கு கிடைப்பதில்லை. You can buy any Indian spice in the net. Many place they don't charge shipping.I hope this info. helps.

அன்புள்ள ப்ரியா!
மே 16, 2008 - 4:02am - வழங்கியவர் Mrs.Mano

நான் துபாய் அருகே வசிப்பதால் அமெரிக்காவில் உள்ள WALLMART பற்றி எனக்கு சொல்ல இயலவில்லை. பொதுவாக DANISH CHICKEN[WHOLE] வாங்கி துண்டுகள் போட்டு சமைப்பது நல்லது. தனியாக கிடைக்கும் BONELESS PIECES-ஐ வாங்காதீர்கள். அவை சமைத்த பிறகு ரப்பர் மாதிரி சற்று கடினமாக இருக்கும்.

மிக்க நன்றி நண்பர்களே
மே 31, 2008 - 12:49pm - வழங்கியவர் Priya82

Rumya மற்றும் Mrs.Mano வுக்கு என்னுடைய மனமகிழ்த்த நன்றி...