www.arusuvai.com
காளான் புலவு:
தேவையானப் பொருட்கள்
- பாஸ்மதி அரிசி- 7 கப்
- காளான் - 1 கிலோ
- இஞ்சி விழுது- 75 கிராம்
- பூண்டு விழுது- 75 கிராம்
- பச்சை மிளகாய் விழுது- 50 கிராம்
- வெங்காயம்- அரை கிலோ
- நெய்- கால் கிலோ
- பொடியாக அரிந்த கொத்தமல்லி- 2 கப்
- தயிர்- கால் கப்
- தேவையான உப்பு
- தேங்காய்ப்பால்- 1 கப்
- கீழ்கண்டவைகளை பொடிக்கவும்:
- பட்டை- 4 துண்டுகள், கிராம்புகள்-8, ஏலக்காய்கள்- 10, சோம்பு- 1 மேசைக்கரண்டி
செய்முறை
- வெங்காயத்தை நீளமாக மெலிசாக அரிந்து கொள்ளவும்.
- நெய்யை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- அதன் பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- மசாலாப்பொடியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- காளான்களை நன்கு கழுவிச் சேர்த்து சிறிது உப்பு, தயிர், கொத்தமல்லி சேர்த்து அவை வேகும்வரை நன்கு வதக்கவும்.
- தேங்காய்ப்பால், தண்ணீர் 13 கப், தேவையான உப்பு சேர்த்து கொதி வருமுன் அரிசியையும் கழுவிச்சேர்க்கவும்.
- முக்கால்வாசி அரிசி வெந்து, தண்ணீர் சுண்டியதும் புலவை ' தம்' மில் வைக்கவும்.
-