உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

புல்கா



தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு - 1/2 கிலோ,
  • தண்ணீர் - தேவையான் அளவு.

செய்முறை

  • கோதுமை மாவுடன் உப்பு சேர்க்காமல் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  • கலவையை ஈரத்துணியால் மூடி 2 மணி நேரம் வைக்கவும்.
  • ஒரே அளவுள்ள உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
  • சப்பாத்திகளாக தேய்த்து, சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் லேசாக சுட்டு எடுக்கவும்.
  • பிறகு நேரடியான தணலில் சுட்டால் உப்பி வரும்.

குறிப்பு:

எண்ணெய் இல்லாமல் செய்வதுதான் இதன் சிறப்பே.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு. 2 மணி நேரம் 30 நிமிடங்கள்.
  random food image


comments
புல்கா!!
நவம்பர் 24, 2008 - 5:05pm - வழங்கியவர் menaga

நல்ல இருந்தது செல்விமா,எண்ணெய் தடவாமல் சுட்டேன் புஸ்னு உப்பி வந்தது,சாப்டாகவும் இருந்தது.

புல்கா...
நவம்பர் 25, 2008 - 3:43am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு மேனகா,
நலமா? ஷிவானி நலமா? இந்த முறையில் தினமும் செய்து சாப்பிட்டால் எடை குறையும். டயட்டில் இருப்பவர்களுக்கு ரொம்ப நல்லது. பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.