www.arusuvai.com
ஸ்வீட் கார்ன் சூப்
தேவையானப் பொருட்கள்
- ஸ்வீட் கார்ன் - 100 கிராம்,
- காய்கறி வேக வைத்த தண்ணீர் - 1/2 லிட்டர்,
- மிளகு தூள் - 1 தேக்கரண்டி,
- வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
- மைதா - 2 தேக்கரண்டி,
- பால் - 150 மிலி,
- அஜினமோட்டோ - 1/4 தேக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை
- வாணலியில் வெண்ணெய் போட்டு, உருகியதும் மைதா சேர்த்து வறுக்கவும்.
- 1 நிமிடம் வறுத்தபின், பால் சேர்த்து கொதிக்க விடவும்.
- 1 நிமிடம் கழித்து, ஸ்வீட் கார்ன், காய்கறி வேக வைத்த தண்ணீர், மிளகு தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- இறக்கி பரிமாறவும். தேவையானால் 1 ஸ்பூன் ஃப்ரஷ் க்ரீம் மேலே ஊற்றி பரிமாறலாம்.
-
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
15 நிமிடங்கள். |