உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பட்டாணி உருளைக்கிழங்கு கறி



தேவையான பொருட்கள்

  • பச்சைப் பட்டாணி - 1 கப் (200 கிராம்),
  • உருளைக்கிழங்கு - 2,
  • தக்காளி - 2,
  • பச்சை மிளகாய் - 2,
  • தயிர் - 1 மேசைக்கரண்டி,
  • தனியாத்தூள் - 1 தேக்கரண்டி,
  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி,
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு.
  • அரைக்க:
  • ======
  • பெரிய வெங்காயம் - 1,
  • பூண்டு - 3 பல்,
  • இஞ்சி -சிறிது,
  • பட்டை - சிறிது,
  • கிராம்பு - 1,
  • ஏலக்காய் - 1,

செய்முறை

  • உருளைக்கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • தக்காளியை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
  • பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
  • அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • மசாலா நன்கு வதங்கியதும், தக்காளி விழுது, தயிர் சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கி, எண்ணெய் பிரிவது போல் வரும் போது, தனியாத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கியபின், உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து வதக்கி 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • உருளைக்கிழங்கும், பட்டாணியும் வெந்து கிரேவி திக்கானதும் இறக்கவும்.

குறிப்பு:

சப்பாத்தி, நாண், புல்கா, ரொட்டி எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு. 20 நிமிடங்கள்.
  random food image


comments