உளுந்து வடை செய்வது எப்படி?

உளுந்து வடையை சுவையாக செய்ய வேண்டுமானால் முதலில் அதிலுள்ள நுனுக்கங்களை தெரிந்துக் கொள்வது நல்லது, வடை மட்டுமல்ல பொதுவாக சமையலுக்கு குறிப்புகலுள்ள நுனுக்கங்களை கற்றுக் கொண்டால் சுவையாக சமைப்பது மிகவும் சுலபம். சரி வாங்க முதலில் உளுந்துவடையிலிருந்து ஆரம்பிக்கலாம்.

உளுந்துவடை மொருமொருப்பாக இருக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் அரைமணி நேரத்திற்க்கும் குறைவாக பருப்பை ஊறவைத்தால் போதுமானது. ஆனால் தயிர் வடை சாம்பார் வடை செய்வதானால் பருப்பு எவ்வளவு நேரம் ஊறினாலும் பிரச்சனையில்லை.

ஒரு கோப்பை உளுந்துக்கு ஒரு தேக்கரண்டி பச்சரிசி அல்லது துவரம்பருப்பை சேர்த்து ஊறவைக்கவும். இவைகள் வடையின் மேல்புறத்தை பொருமொருப்பாக அதிக நேரம் வைத்துக் கொள்ளும்.

இரண்டு தேக்கரண்டி உளுந்தம்ப்பருப்பை தனியாக ஊறவைத்துக் கொள்ளவும், இது அரைத்த மாவில் கலப்பதற்கு.இவை மாவு ஒன்றாக ஒட்டாமல் விலகி இருக்க உதவிடும்.

ஊறிய பருப்பை மைய்ய அரைக்காமல் கொஞ்சம் சொரசொரப்பாக அரைக்கவும்,இவ்வாறு அரைப்பதால் வடை ஒரே சீராக வேகும்.

பிறகு அதில் உப்பையும் ஒரு சிட்டிகை சோடாவையும் போட்டு நன்கு கலக்கவும்.சோடா உப்பு போடுவதால் வடை ஆறினாலும் கெட்டியாகாமல் மெதுவாக இருக்கும்.

பிறகு கலக்கிய மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் தனியாக ஊறவைத்துள்ள பருப்பையும் சேர்த்து கலக்கவும்.

கலக்கிய மாவை உள்ளங்கையில் தண்ணீரைத்தடவி தேவையான மாவை உருண்டையாக உருட்டி வைத்து வடையாக தட்டி அதன் நடுவில் துளையிட்டு, தயாராக இருக்கும் சூடான எண்ணெயில் மெதுவாக போட்டவும்.

சட்டியின் அளவிற்க்கு ஏற்ப்ப வடைகளை நல்ல இடைவெளியில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் மாற்றவும், ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இளஞ்சிவப்பாக பொரித்து எடுக்கவும்,

இவ்வாறு ஒவ்வொறு முறையும் அடுப்பை கூட்டியும் குறைத்தும் எண்ணெயின் சூட்டை கட்டுப் படுத்த வேண்டும். இல்லையென்றால் வடை சீக்கிரத்தில் வெந்து விரைவில் சாப்ட்டாகிவிடும். அல்லது அதிக நேரம்மெடுத்து எண்ணெய் நிறைய்ய எடுத்துக் கொள்ளும்.

அதேப்போல் வடைகளைப் பொரிக்கும் பொழுது ஒவ்வொறு முறையும் ஒரே நேரத்தி போட்டு ஒரே நேரத்தில் எடுக்க வேண்டும், இல்லையென்றால் எண்ணெயின் சூடு மாறுபட்டு வடை மொரு மொருப்பு தன்மையை இழந்து கெட்டியாகிவிடும்.

மாவுக் கலவை அதிக நேரம் ஊறாமல் இருப்பது நல்லது இல்லையென்றால் வெங்காயத்திலிருக்கும் நீர் கசிய ஆரம்பித்து வடையின் சுவையை மாற்றிவிடும், ஆகவே அகலமான சட்டியில் வடையின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டால் வேகமாக சுட்டெடுக்கலாம்.

புதிதாக வடைச் செய்ய கற்றுக் கொள்பவர்கள் மேற் காணும் முறையில் ட்ரை செய்து பார்த்துவிட்டு கூறுங்கள்.நன்றி.

மனோ மாமி சமையலில் 25 வருட அனுபவம் உள்ளவர்.
அவர் சொல்லியிருந்தது போல் உளுந்த வடைக்கு சரியான அளவில் மாவை தயார் செய்து கொண்டுஅதில் சிரு சிரு துன்டுகளாக நருக்கிய தேங்காய் சேர்துக்கொள்ளவும்.வெங்காயம் மிளகாய் தேவை இல்லை.மேலும்சிறிதளவு மிளகு சீரகம் கரிவேப்பிலை இம்மூன்றையும் ஒன்ரிரன்டாக தட்டிக்கொள்ளவும்.இதையும் மாவுடன் சேர்துக்கொள்ளவும்.மாவை உருன்டைகளாக தட்டி எண்ணெயில் போடவும். ஆனால் ஒரே முறையில் போட்டு எடுக்க வேண்டாம்.முதலில் மாவை போட்டு மாவு லேசாக கெட்டியனதும் எடுத்து பின்பு சிறிது நேரம் கழித்து இன்னொரு முறை போட்டு எடுக்கவும். இரண்டு முறை பொறிப்பதால் வடையின் ருசி மிகவும் அருமையாக இருக்கும்.

Try this recipe and have a different taste........

மேடம் நீங்க சொன்ன மாதிரியே உளுந்து வடை செய்தேன் ரொம்ப அற்புத சுவையோட வந்தது ஓட்டை மட்டும் போட முடில குட்டி குட்டி போன்டா மாதிரி போட்டேன் எல்லாரும் சாப்டு ரொம்ப.... டேஸ்டா இருக்கு சொன்னாங்க ரொம்ப நன்றி மனோ மேடம்...:)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நன்றி

It's very useful to me, morumoru vadai prepration method step by step it's very good explain. congratulation. "Vazhga Valamudan".

Thank you,

with love,
S.Suguna.

மேலும் சில பதிவுகள்