உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

மாங்காய் இஞ்சி குழம்பு



தேவையானப் பொருட்கள்

  • மாங்காய் இஞ்சி - 50 கிராம்
  • சின்ன வெங்காயம் - 200 கிராம்(நறுக்கியது)
  • தேங்காய் துருவல் - 1/2 மூடி
  • கசகசா - 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 6
  • பூண்டு - 4 பல்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • தனியா தூள் - 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • புளி - ஒரு பெரிய எழுமிச்சம்பழ அளவு
  • கறிவேப்பிலை - சிறிது
  • வெல்லம் - சிறிது
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
step 1
வெங்காயம், பூண்டு நறுக்கி, தேங்காயை துருவி வைக்கவும். மாங்காய் இஞ்சியை தோல் சீவி கழுவிவிட்டு, பொடியாக நறுக்கவும். புளியை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.
step 2
வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், சீரகம் போட்டு தாளித்து, அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
step 3
வெங்காயம் சற்று வதங்கியவுடன் துருவிய தேங்காய், கசகசா சேர்த்து வதக்கவும்.
step 4
ஆறிய பின், அத்துடன் தனியா தூள், சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த விழுதை புளிகரைசலுடன் சேர்த்து கரைத்து வைக்கவும்.
step 5
ஒரு சட்டி அல்லது வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, பூண்டு, 2 சின்ன வெங்காயம் நறுக்கியது, கறிவேப்பிலை தாளிக்கவும். அதில் நறுக்கிய மாங்காய் இஞ்சி துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
step 6
இஞ்சி நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றவும்.
step 7
அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் போட்டு கொதிக்க விடவும்.
step 8
குழம்பு கெட்டியாகி எண்ணெய் மிதக்கும் போது இறக்கவும்.
step 9
சுவையான, உடலுக்கு ஆரோக்கியமான மாங்காய் இஞ்சி குழம்பு தயார்.
step 10
அறுசுவையில் 400 க்கும் அதிகமான குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இன்னும் ஏராளமான குறிப்புகளை அறுசுவை நேயர்களுக்கு வழங்கவிருக்கின்றார்.
step 11


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
மாஇஞ்சி குழம்பு சூப்பர்
மார்ச் 5, 2008 - 9:33am - வழங்கியவர் pradeebala

ஹாய் செல்விமா உங்க மாஇஞ்சி குழம்பு செய்தேன்.எனக்கும் அவருக்கும் ரொம்ப பிடித்தது.ரொம்ப நன்றி செல்விமா
அன்புடன் தீபா

மாங்காய் இஞ்சி...
மார்ச் 5, 2008 - 10:42am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு தீபு,
நலமா? மாங்காய் இஞ்சி குழம்பு உனக்கு மட்டுமன்றி, உன் கணவருக்கும் பிடித்தது மிக்க சந்தோஷம். உன்னுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

செல்விமா .. மாங்காய் இஞ்சி குழம்பு... சூப்பர்
ஏப்ரல் 24, 2008 - 2:37pm - வழங்கியவர் இலா

போன வாரமே செய்து பார்த்து விட்டேன்..... மிகவும் அருமை.. வித்தியாசமான குறிப்புகள் தந்து எங்களை வாழவைக்கிறீர்கள்....

என் கணவர் 2 நாள் நல்லா ருசித்து சாப்பிட்டார்
அண்ணா வீட்டிற்க்கு பார்சலும் அனுப்பினேன்

நன்றி !!! நன்றி.!!!!

Hope is just the part of the equation

மாங்காய் இஞ்சி குழம்பு...
ஏப்ரல் 26, 2008 - 10:51pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு இலா,
நலமா? தாமத பதிலுக்கு மன்னிக்கவும். பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள். ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு மட்டுமன்றி உங்கள் குடும்பத்திற்கே பிடித்ததில் மிக்க சந்தோசம்.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

Iam going to prepare mangainji tomorrow
ஆகஸ்டு 25, 2008 - 10:49am - வழங்கியவர் MuthuVinni

-Vinni
Will add my comments tomorrow after prepare/taste this item

சொல்லுங்க...
ஆகஸ்டு 27, 2008 - 12:57pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு வின்னி,
நாளைக்கு இந்த குறிப்பை செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள், எப்படி இருந்ததுன்னு.
அன்புடன்,
செல்வி.