பெரிய பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் போனதும் ஸ்டார்ட்ஸ் சாப்பிட இந்த சைனீஸ் சிக்கன் ஸ்பிரிங் ரோல் தான் கொடுப்பார்கள்.
தேவையானப் பொருட்கள்
- சிக்கன் - நூரு கிராம்
- முட்டை கோஸ் - அரை கப்
- கேரட் - கால் கப்
- கேப்ஸிகம் - இரண்டு மேசை கரண்டி
- வொயிட் பெப்பர் - ஒரு தேக்கரண்டி
- சோயா சாஸ் - ஒரு டிராப்
- உப்பு - தேவைக்கு
- ஸ்பிங் ஆனியன் - ஒரு ஸ்டிக் ( இரண்டு மேசை கரண்டி)
- பூண்டு - இரண்டு பல்லு
- பட்டர் - ஒரு தேக்கரண்டி
- சர்க்கரை - அரை தேக்கரண்டி
செய்முறை
- சிக்கன், காய் கறி பூண்டு அனைத்தையும் துருவிகொள்ளவும் (அ) பிளெண்டரில் தனித்தனியாக போட்டு வைகவும்.
-
- ஒரு பேனில் பட்டரை உருக்கி அதில் சர்க்கரை பூண்டை போட்டு வதக்கவும்.
- பிறகு சிக்கன் துருவல், போட்டு வதக்கி வெந்ததும் காய் கறிகள்,சோயா சாஸ்,உப்பு,வொயிட் பேப்பர் போட்டு வதக்கவும்.
- இரண்டு முன்று நிமிடம் வதக்கினால் போதும்.
- வதக்கிய கலவையை ஆறவிடவும்.
-
- இப்போது ரோல் தயாரிப்பது:
- --------------------------
-
- மைதா,உப்பு சேர்ட்து தளற குழைக்கவும்.
- அதை சப்பாத்தி போல் மிக மெல்லியதாக இடவும்.
-
- அதை சதுர வடிவமாக வெட்டவும்.
-
- இதே போல் எவ்வளவு தேவையோ அததனை நல்ல மாவு தேய்த்து இட்டு அதை லேசாகா தவ்வாவுஇல் சூடு படுத்ஹி ஆறவிடவும்.
- இப்போது ஷீட் தயார் அதில் கலவையை வைத்து சைடை இரண்டு புறமும் மடித்து பிறகு ரோல் செய்யவும்.
- மைதா பேஸ்ட் சிறிது குழைத்து கடைசியில் ஒட்டவும்.
- இதை எண்ணையில் பொரித்தெடுகவும்.
-
குறிப்பு
இதே சிக்கன் இல்லாமல் வெஜ்ஜாகவும் செய்யலாம்.
சைனீஸ் அயிட்டத்தில் அஜின மோட்டோ சேர்ப்பார்கள்.
அது கெடுதல் என்று தெரிந்ததிலிருந்து நான் சேர்ப்பது கிடையாது.
பயன் படுத்துபவர்கள் அதை ஒரு பின்ச் பயபடுத்தினால் போதும்.
இதே இந்த ரோல் துபாய் மற்றும் வெளிநாடுகளில் ரெடி மேட் கிடைக்கிறது அதிலும் செய்யலாம்.