உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

வெஜ்டேபுள் குருமா

 

இது பார்க்க கலர் புல்லாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்

  • உருளை கிழங்கு - ஒன்று
  • கேரட் - ஒன்று
  • பீட்ரூட் - அரை
  • பீன்ஸ் - எட்டு
  • பட்டாணி - கால் கப்
  • சோள மணிகள் - கால் கப்
  • கருனை கிழங்கு - கால் கப்
  • காலி பிளெவர் கால் - கப்
  • பச்ச மிளகாய் - நான்கு
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • தயிர் - கால் கப்
  • எண்ணை - முன்று தேக்கரண்டி
  • டால்டா (அ) நெய் - இரண்டு தேக்கரண்டி
  • பட்டை - ஒரு அங்குலம் ஒன்று
  • கிராம்பு - இரண்டு
  • ஏலம் - ஒன்று
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
  • தக்காளி - முன்று
  • வெங்காயம் - முன்று
  • பாதம் - ஐந்து
  • முந்திரி - ஐந்து
  • தேங்காய் - இரண்டு பத்தை
  • கச கசா - ஒரு தேக்கரண்டி
  • .
  • கொத்து மல்லி தழை - அரை கட்டு
  • புதினா - கால் கட்டு

செய்முறை

  • எண்ணையும் டால்டாவையும் காய வைத்து அதில் பட்டை, கிராம்பு,ஏலம் போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை பொடியாக அரிந்து பொட்டு வதக்கவும்.
  • வெங்காயம் கலர் மாறியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல பொன்முருவலாக வதக்கவும்.
  • பாதி கொத்து மல்லி, புதினா ,பச்சமிளகாயை ஒடித்து போட்டு வதக்கவும்.
  • பிறகு தக்காளியை நாலாக அரிந்து போடவும். அதில் முதலில் உருளை,கேரட்,கருனை கிழஙு,பீட்ரூட்டை போட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
  • பிறகு பீன்ஸ்,கார்ன்,பட்டாணி,காலி பிளெவரை போட்டு வதக்கவும்.
  • பிறகு மிளகாய் தூள், உப்பு தூள், மஞ்சள் தூள் பொட்டு தயிரையும் சேர்த்து வதக்கி தீயை சிம்மில் வைத்து வேகவிடவும்.
  • தேங்கய், பாதம்,கசசாவை அரைத்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • கடைசியில் முந்திரியை பவுடர் செய்து தூவி, மீதி உள்ள கொத்து மல்லி புதினாவை பொடியாக அரிந்து தூவி பரிமறவும்.

குறிப்பு:

கீ ரைஸ், ரொட்டி சப்பாத்தி தோசை,ஆப்பம் பூரி போன்றவற்றிக்கு பொருந்தும் குக்கரிலும் செய்யலாம் சீக்கிரம் முடிந்து விடும்

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

5 person 20 min 25 min
  random food image


comments
வெஜ் குருமா கேட்டீர்களே
மார்ச் 3, 2008 - 8:33am - வழங்கியவர் Jaleela Banu

டியர் விஜி
வெஜ் குருமா கேட்டீர்களே.இதோ இந்தாங்க உங்களுக்காகவே.
படத்துடன் கொடுக்கலாம் என்று இருந்தேன் ஆனால் டைம் எடுக்கும் போல இருக்கு
ஆகையால் கொடுதுள்ளேன்.
பாருங்க. வெஜ் குருமா பல வகைகளில் செய்யலாம்.
வெள்ளை குருமா, மிளகு தனியா சேர்த்து, இன்னொரு முறை இது.
ஜலீலா

ரெசிப்பி
மார்ச் 3, 2008 - 8:47am - வழங்கியவர் Vijitvm

ஜலிலா அக்கா,

வனக்கம். வாவ் ரெசிப்பி பார்த்தாவுடனேயே செஞ்சு சப்பிடனும் போல் இருக்கு. நான் நாளய்க்கு செய்ய போகிரேன்.

தாங்ஸ்.
craft section என்று எதாவது நம்ம அருசுவயில் தளம் இருக்கா? தெரிந்தால் சொல்லுங்கள்.

தாங்ஸ்

வெஜ் குருமா
மார்ச் 5, 2008 - 4:45pm - வழங்கியவர் Vijitvm

ஹாய் ஜலிலா அக்கா

வெஜ் குருமா செய்தேன். நன்றாக வந்தது. ரொம்ப நன்றி. பூண்டு ஊறுகாய் ரெசிப்பி குடுங்களேன்.

hai jaleela sis,
மார்ச் 7, 2008 - 2:21pm - வழங்கியவர் Vijitvm

enna makalir thina spl menu cheeya pooringa? enkay thalika,kthija,mano athira ellam kaanavillaye? enakku unga ella rudaya samayal kuripukalum romaba pdiththurukku. Thanks for everyone.

சாம்பார்
மார்ச் 14, 2008 - 8:52am - வழங்கியவர் Vijitvm

ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது. நன்றி. நான் ஒன்று கேட்பேன் செய்விங்களா? இவ்வளவு நல்லா எல்லாம் சமக்கிறிங்க, குறிப்புகள் தற்றிங்க், உங்களைப்பற்றி கொஞ்ஜம் சொல்லுங்கள், முடிந்தால் எனக்கு உங்க்ளை பார்க்கனும். போட்டோ அனுப்புங்க.

தாங்ஸ்.

விஜி TVM(வெஜ் குருமா)
மார்ச் 14, 2008 - 11:58pm - வழங்கியவர் Jaleela Banu

அன்புள்ள விஜி TVM

அன்புள்ள விஜி TVM
வெஜ் குருமா நல்ல இருந்ததா? செய்து பாஅர்த்து பின்னுட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
என்னை விட உங்களுக்கு தான் அனுபவம் ஜாஸ்தி. 20 வருடம் என்னை போய் புகழ்கிறீர்களே.
உங்க மெயில் ஐடி இருந்தா கொடுங்க.

எனக்கு இரண்டு பையன்கள். துபாயில் இருக்கிறேன்,
உங்களை பற்றியும் சொல்லுங்கள்
ஜலீலா

jalleela
மார்ச் 15, 2008 - 7:49am - வழங்கியவர் Vijitvm

ஹாய் ஜலீலா அக்கா இது தான் மைல் ஜடி hiviji@yahoo.com

ஜலீலாக்கா எனக்கும்
மார்ச் 15, 2008 - 7:55am - வழங்கியவர் அதிரா

ஜலீலாக்கா எனக்கும் உங்கட படம் அனுப்புறீங்களா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா பேச கூடாது என்று இல்லை
மார்ச் 15, 2008 - 8:01am - வழங்கியவர் Jaleela Banu

அதிரா பேச கூடாது என்று இல்லை, நான் ஜோக்காக சொலவது சில பேர் சீரியஸாக எடுத்து கொள்கிறார்கள் ஆகையால் தான் பேசுவதை நிருத்தினேன்.
மற்ற படி ஒன்றும் இல்லை. கொடுங்கள் உங்க மெயில் ஐடியும். நான் பேசுவது யாருக்காவது பிடிக்க வில்லை என்றால் உடனே சொல்லி விடுங்கள்.
ஜலீலா

ஜலீலாக்கா பேசுவதை மட்டும் நிறுத்திடாதீங்க
மார்ச் 15, 2008 - 8:11am - வழங்கியவர் அதிரா

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜலீலாக்கா பேசுவதை மட்டும் நிறுத்திடாதீங்க
மார்ச் 15, 2008 - 8:12am - வழங்கியவர் அதிரா

ஜலீலாக்கா பேசுவதை மட்டும் நிறுத்திடாதீங்க. ப்ளிஸ். ஓரிடத்தில் பார்த்தேன் குறிப்பு கொடுப்பதை நிறுத்தப் போவதாக கூறினீர்கள். வேண்டாமக்கா. நிறுத்திடாதீங்க. குறிப்பு அனுப்பாதுவிட்டால் நீங்க இந்தப் பக்கம் வரவும் மாட்டீங்க.
என்னுடைய id athira@hotmail.co.uk

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜலீலாக்கா
மார்ச் 15, 2008 - 9:08am - வழங்கியவர் thalika

என்ன ஜலீலாக்கா இது சின்னபுள்ளத் தனமா...ஒரு தளம்னா அதில் நூறு பேருக்கு நம்மால் ப்ரச்சனை எதுவும் இல்லைன்னாலும் ஒருத்தருக்கு நம்மை கண்டால் ஆகாது...எப்படியாவது நம்மை நோன்டிவிட்டு துரத்தப் பார்ப்பார்கள்...அவங்களைப் பற்றி கவலைப் படக் கூடாது..(அனுபவம் பேசுது:-D)
போடாங்க ந்னு சொல்லிட்டு வந்து பேசிக்கிட்டே இருக்கனும் ..சரியா இப்ப கண்ணைத் தொடச்சுக்குங்க பாக்கலாம்

தளிகா:-)

கே.ஆர் விஜியா, விஜிய குமாரி
மார்ச் 15, 2008 - 9:20am - வழங்கியவர் Jaleela Banu

தளி கண்ணுல தண்ணி வந்தாதானே தொடைக்கறதுக்கு,
முன்பெல்லாம் கே.ஆர் விஜியா, விஜிய குமாரி போல் கண்ணுகு பக்கத்துல தண்ணி அச்சுன்ன புச்சுன்னா
ஹி ஹி ஹ ஹ ஹா ஆனால் இப்போ கல் மனசு + இரும்பு எப்படி.
எல்லம் தப்ப நினைப்பதால் புது வரவு அஞ்சலிக்கு கூட பாட்டு பாடலா
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி என்று.
இன்னும் ஒரு ஜொக் மண்டை குடயுங்கோ நளைக்கு சட்டிங் - கில் ஒகே வா தளி

ஜலீலா

என்ன புதிர் எல்லாம் போடுறீங்க
மார்ச் 15, 2008 - 9:25am - வழங்கியவர் அதிரா

என்ன புதிர் எல்லாம் போடுறீங்க. அங்கே இப்போ நேரம் என்ன? எங்களுக்குத் தெரியாதென்றுதானே, கண் எல்லாம் துடைக்கவில்லை என்று தைரியமாக சொல்றீங்க? உங்க பதில் கண்ணீர் பட்டு அழிஞ்சிருந்ததே.... அதுக்கென்ன காரணம்...?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

jalilia,thalika,
மார்ச் 15, 2008 - 10:10am - வழங்கியவர் Vijitvm

anjali,athira,selvi,kathija,ja
ynthi maami,deva,manomedam,nandhini,
jeyasri,janakimedam kulsai uncle etc....

எல்லாரும் கொஞ்ஜம் ஊர் சுற்றலாம் வாங்க பகுதிக்கு வந்து கொஞ்ஜம் உங்க ஊர் விஷேஷங்களை எல்லாம் சொல்லுங்க அப்பா. கொஞ்ஜம் ஹெல்ப் பன்ன்னுங்க.

ஹஹஹா விஜி
மார்ச் 15, 2008 - 10:14am - வழங்கியவர் thalika

ஹஹஹா விஜி பயந்துட்டு தலைப்பை கட் பன்னிட்டீங்களா..அங்க அட்மின் பிரம்பை ரெடி பன்னிட்டு இருதாரு

no need
மார்ச் 15, 2008 - 10:19am - வழங்கியவர் Vijitvm

என்ன தளி எதுக்கு பிரம்பு அவர் பிரம்பில்லாமல் சாட் வழியாக அடிக்கலாம்.

thalika
மார்ச் 15, 2008 - 10:21am - வழங்கியவர் Vijitvm

ஏய் தளி கொஞ்சம் பிக்சர் அனுப்புய்யா.hiviji@yahoo.com

thalika
மார்ச் 15, 2008 - 10:21am - வழங்கியவர் Vijitvm

ஏய் தளி கொஞ்சம் பிக்சர் அனுப்புய்யா.hiviji@yahoo.com

kulasaisulthan senior student avarkLkku
மார்ச் 15, 2008 - 10:30am - வழங்கியவர் Vijitvm

ஹாய் ஸ்டுடன்ட்ஸ்

அவசரம் இல்லமல் நிதானமாக படித்த,தெரிந்த பாடங்களை எல்லாரும் குரூப் ஸ்டடி செய்து கூட எழுதலாம். கைஎழுத்து ந்ன்றாக இருக்க வேண்டும். யார் நிறய்யா கருத்துகள் எழுதறாங்க பார்க்கலாம். ஞாயிறு விடுமுறை எடுத்துங்கா. ஆல் தி பெஸ்ட்.

ஹாய் விஜி
மார்ச் 15, 2008 - 11:19am - வழங்கியவர் அதிரா

ஹாய் விஜி. பிரம்போட எல்லோரையும் விரட்டுறீங்களே, நீங்க மட்டும் எந்த ஊரென்று போட பயமா?
தான் முன்னால போய்த்தான் மற்றவர்களை பின்னால அழைக்கணும் ... சோ முதலில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்.... சுல்தான் அங்கிள் ... பயத்தில எல்லாம் சொல்லிட்டார்... நாங்க பயப்படமாட்டோம்... முதலில் நீங்க....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆகா அங்கிள்
மார்ச் 15, 2008 - 12:35pm - வழங்கியவர் அதிரா

ஆகா அங்கிள் கீழ விழுந்தாலும்........... என்ற கதையாகவல்லவா இது இருக்கிறது....... ஐயோ கோபிச்சிட வேண்டாம்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உன்னை ஒன்று கேட்பேன் உன்மை சொல்லவேண்டும்
மார்ச் 15, 2008 - 9:26pm - வழங்கியவர் Vijitvm

என்னை பற்றி சொல்வதற்க்கு என்றால் நிறய்யா இருக்கு. அவ்வள்வு சிக்கிரம் சொல்ல முடியும்மா.என் பெயர் விஜி. நான் பிற்ந்தது கேரளா, படித்து கேரளா,வேலை பார்தது தமிழ் நாட்டில்.. நான் ஒரு இந்தியன். ஏன் என்று நினைக்கிற்களா? எனக்கு தமிழ்,தெலுங்கு,மலையாளம்,சமிஸ்க
ிருதம்,ஹிந்தி,
கன்னடம்,ஸிந்தி தெரியும். நான் ஒரு இந்தியன். நான் கர்நாட்க சங்கிதம் பாட்டு நல்லா பாடுவேன். நிற்ய்ய பாட்டு நிகழ்ச்சிக்ள் டிவி,ரேடியோவில் பாடியிருக்கேன். கணிணி பயின்று அதில் வேலை பார்த்தென். இனியும் சொல்ல வேண்டுமென்றால் ஒரு த்ரெட் ஒப்பன் பண்ண வேண்டி வரும். தமிழ் கொஞ்ஜம் தப்பு இருக்கும் மன்னிக்கவும்.

சரி உங்களை பற்றி கொஞ்ஜம். சொல்லுங்கள் அதிரா. கேரளாவில் என்னுடைய்ய தோழியின் பெயர் கூட அதிரா. நல்ல பெயர்.

semi home made or easy milk sweets ஜலீலா/குலசை
மார்ச் 17, 2008 - 5:32pm - வழங்கியவர் Vijitvm

என் ஹஸ்க்கு ஸ்விட்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும்.என்ன குலசை ஸார் கொஞ்ஜம் மேடம்கிட்ட கேட்டு ஒரு எளிய முறையில் செய்யகூடிய மில்க் ஸ்விட்ஸ் ரெசிப்பி சொல்லுங்க.எளிய முறை என்று ஏன் சொன்னால் எனக்கு காலின் அடியில் வலி தாங்க முடியல்ல நிறய்ய நேரம் நின்று சமைக்க முடியல்ல. நான் மெடிக்கேரில் தான் இருக்கேன். அதலால் எனக்காக நம்ம அறுசுவை வழியாக எளிய முறையில் ஒரு ஸ்விட் செய்து சாப்பிட ஆசை. குலசை ஸார் நிங்க உடனேயே கடை ஸ்விட்ஸ் எளிது தான் சொல்லதிங்க. இங்கு இந்தியன் கடையில் கிடைக்கும். அது நல்லா இல்லை. தமாஷ்க்காக் சொன்னேன்.

நன்றி.

ஹலோ விஜி
மார்ச் 17, 2008 - 10:37pm - வழங்கியவர் aniaksh

ஹலோ விஜி,
மைக்ரோவேவ் தலைப்பில் பாருங்க. பால்கோவா ரெசிபி இருக்கு. செஞ்சு பாருங்க. ரொம்ப நல்லா வரும்.

Rajini