வெங்காயக் குழம்பு

தேதி: March 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 15 இலைகள்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 4 பல்
தக்காளி - ஒன்று
புளிக்கரைசல் - அரை கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - அரை கப்


 

இந்த வெங்காயக் குழம்பு செய்வதற்கு கொஞ்சம் அதிகமாக எண்ணெய் எடுத்தால் சுவையாக இருக்கும். 4 அல்லது 5 தேக்கரண்டி எண்ணெய் இருந்தால் நல்லது.
எண்ணெயை காயவைத்து வரிசையாக கொடுத்துள்ளவற்றை கொண்டு தாளிக்கவும்.
பின் வெங்காயத்தையும், பூண்டையும் சேர்த்து நன்கு பொன்னிறத்துக்கு வரும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து நன்கு மசிந்து வெங்காயத்துடன் கலந்து மை போல ஆகும் வரை வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்களை சேர்த்து மேலும் வதக்கி புளிக் கரைசல், உப்பும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்து மேலும் ஒரு 15 நிமிடம் கொதித்ததும் இறக்கி பரிமாறவும். (ரெடிமேட் தேங்காய்பால் பவுடர் 3 ஸ்பூன், 1/2 கப் தண்ணீரில் கரைத்து தேங்காய்ப்பாலுக்கு பதில் ஊற்றினாலும் சுவை தான்.)


சிலர் தேங்காய் அரைத்த விழுது ஒரு கப் பக்கம் சேர்த்து செய்வார்கள். அதுவும் நன்றாக தான் இருக்கும். ஆனால் கொஞ்சமாக தேங்காய்ப் பால் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். குழம்பு நல்ல திக்காக இருந்தால் நல்லது. இதனை அன்றே சாப்பிடுவதை விட அடுத்த நாளுக்கு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சின்ன வெங்காயம் நறுக்க ரொம்ப அலுப்பாக இருந்தால் பெரிய வெங்காயம் 2 சேர்த்து செய்யுங்கள். கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்று வெங்காயம் நல்ல ப்ரவுனாக வதங்கட்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு தளிகா அவர்களுக்கு

1.நான் நேற்று உங்கள் வெங்காய குழம்பை செய்து பார்த்தேன்,மிகவும் நன்றாக வந்தது.
2.இந்த குழம்பில் தேங்காய் பால் சேர்க்காமல் புளி கொஞ்சம் கூடுதலாக போட்டு இதே பொருட்களை கொண்டு செய்வோம் அதை புளி குழம்பு என்போம்.
3.ஆனால் தேங்காய் பால் சேர்த்து,புளி தண்ணீர் குறைவாக ஊற்றினால் (அதாவது உங்கள் அளவின் படி செய்தால்)நன்றாக இருக்கிறது.
4.இங்கு சின்ன வெங்காயாம் கிடைக்காது பெரிய வெங்காயாத்தை கொண்டு செய்தேன் நன்றாக இருந்தது.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மிக்க நன்றி மஹா.அப்படியா புளிக் குழம்பு கூட உண்டா.இது நான் கண் மூடி செய்தாலும் நல்ல வரும் குழம்புகளுள் ஒன்று.அதனால் எனக்கும் இது மிகவும் பிடிக்கும்.
குறுகிய காலத்துக்குள் பல அருமையான குறிப்புகள் கொடுத்து எங்களை எல்லாம் ஆச்சரியப்பட வைத்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்..மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்கள் சரியா.

ரூபி நலமா? இன்னைக்கு உங்க வெங்காய குழம்பு வைத்தேன்.சூப்பரா இருந்தது.எளிமையான சுவையான குறிப்பு.சின்ன வெங்காயம் தான் உபயோகித்தேன். தேங்காபால் மட்டும் ரெடியா இருந்தா சட்டுனு செஞ்சிரலாம்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.