சிக்கன் கைமா ரொட்டி

தேதி: March 4, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 200 கிராம்,
சிக்கன் கைமா - 1/4 கிலோ,
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி,
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி,
சோயா சாஸ் - 1 /2 தேக்கரண்டி,
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.


 

சிக்கனை சுத்தமாக கழுவி, சிறிது உப்பு சேர்த்து, ஆவியில் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
கரம் மசாலா, மிளகாய் தூள், வேக வைத்த சிக்கன், சாஸ் வகைகள் சேர்த்து, கிளறி இறக்கவும்.
அத்துடன் கோதுமை மாவு, மீதி உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
எழுமிச்சையளவு உருண்டைகளாக எடுத்து, லேசாக மாவு தொட்டு, சிறிது மொத்தமாக தேய்த்து, தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.


தொட்டுக்கொள்ள சாஸ், தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி மேடம் சிக்கன் கைமா ரொட்டி ரொம்ப நல்லா வந்தது.டேஸ்ட்டாகவும் இருந்தது.தயிர் வெங்காய பச்சடி கூட வைத்தேன்.கூடவே உங்கள் சிக்கன் ரிச் குருமாவும் பன்னேன்.சூப்பர்.

அன்பு மோனி,
பாராட்டுக்கு நன்றி. பரவால்ல சோம்பேறித்தனமில்லாம 2 வெரைட்டியா தொட்டுக்க பண்ணியிருக்கீங்க. உங்க உழைப்புக்கு பாராட்டுக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா நலமாக இருக்கிறீர்களா?
சிக்கின் கைமா என்றால் என்ன?
அரைத்த சிக்கினை சொல்வீர்களா?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அன்பு வத்சலா,
நலமா? நான் நலமே. கொத்தின கறி வகைகளைத் தான் கைமா என்போம். மட்டன் என்றால் மட்டன் கைமா. சிக்கன் என்றால் சிக்கன் கைமா. அரைக்கணும்னு இல்லை.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வியக்கா,
இரவுச் சமையல் எல்லாம் முடிந்ததா? அறுசுவைக்கு வந்திட்டீங்கள்.

வத்சலா....
www.arusuvai.com/tamil/node/6772
திறந்து பாருங்கள் உள்ளே விளக்கம் இருக்கிறது.

செல்வியக்கா அந்த..... கரிச்சட்டி யானைக்கதை..... மறக்காமல் ஓகே:) அதிரா போயிட்டுவாறன்.

இன்னுமொன்று செல்வியக்கா...... அறுசுவையை இதைவிட ஸ்லோவாக:) இயங்க வைக்க முடியாதோ, என்று ஒருக்கால் கேட்டுச் சொல்ல முடியுமோ?(இல்லை செல்வியக்கா பல நேரங்களில் இப்படி, சில நேரங்களில் ப..ட்..டு ப..ட்..டு என்றும் வருகிறது) .... காப்பாத்துங்கோ...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் நலமாக இருக்கிறேன்.உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
சிக்கின் கைமா ரொட்டி செய்தபின் பின்னூட்டம் அனுப்புகிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"