உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

ருமாலி ரொட்டி

 


தேவையான பொருட்கள்

  • மைதா மாவு - 1/2 கிலோ,
  • பால் - 1/2 கப் / 100 மிலி,
  • சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி,
  • பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.

செய்முறை

  • மைதா, சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து இருமுறை சலிக்கவும்.
  • பாலை வெதுவெதுப்பாக்கி மாவில் சேர்த்து மிருதுவாக பிசையவும். போதவில்லை யெனில் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி ஈரத்துணியால் மூடி பிரிஜ்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.
  • பிறகு எடுத்து உருண்டைகளில் குழி செய்து சிறிது எண்ணெய் விட்டு மூடி திரும்ப பிரிஜ்ஜில் வைக்கவும்.(குறைந்தது ஒரு மணி நேரம்)
  • பெரிய வாணலியை நன்கு அடியில் தேய்து கழுவி விட்டு, அடுப்பில் குப்புற சூடு செய்யவும்.(அடி மேல் பக்கம் இருப்பது போல்)
  • உருட்டு வைத்த உருண்டைகளை மிக மெல்லியதாக தேய்த்து, வாணலி மேல் போட்டு நன்கு சுட்டதும் எடுத்து நான்காக மடித்து, சூடாக பரிமாறவும்.

குறிப்பு:

இதற்கு பனீர் பட்டர் மசாலா, ஆலு கோபி, பனீர் மட்டர், சிக்கன் கிரேவி நன்றாக இருக்கும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு. 2 மணி நேரம் 30 நிமிடங்கள்.
  random food image


comments
ஹலோ செல்வி மேடம்
செப்டம்பர் 7, 2008 - 10:11am - வழங்கியவர் Thanisha

உங்க ருமாலி ரொட்டியும், சிக்கன் கிரேவியும் செய்தேன். ரொம்ப சூப்பரா இருந்தது. ரொம்ப நன்றி.

நன்றி தனிஷா...
செப்டம்பர் 7, 2008 - 11:17am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு தனிஷா,
புதுவரவு இல்ல நீ(ங்க)? நலமா?
பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

ஹலோ செல்வி மேடம்
செப்டம்பர் 10, 2008 - 1:19pm - வழங்கியவர் Thanisha

என்னை நீங்க நீ என்றே அழைக்கலாம். உங்க ரெஸிப்பி எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு

தனிஷா...
செப்டம்பர் 10, 2008 - 3:24pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு தனிஷா,
அப்படியே கூப்பிடறேன். உன்னுடைய பாராட்டுக்கு நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.