தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 200 கிராம்,
- கொத்தின ஆட்டுக்கறி - 1/4 கிலோ,
- பெரிய வெங்காயம் - 1,
- பச்சை மிளகாய் - 2,
- மிளகு தூள் - 1 தேக்கரண்டி,
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி,
- இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
- எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
- உப்பு - தேவையான அளவு.
|
செய்முறை
- கொத்தின ஆட்டுக்கறியை சுத்தமாக கழுவவும்.
- வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ப்ரஷர் பேனில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- அத்துடன் கரம் மசாலா, மிளகு தூள், கழுவிய மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அத்துடன் உப்பு, 1/2 தம்ளர் தண்ணீர் சேர்த்து, மூடி, 3 விசில் விடவும்.
- ஆறியதும் திறந்து, அதனுடன் கோதுமை மாவு சேர்த்து நன்கு பிசையவும்.
- எழுமிச்சையளவு உருண்டைகளாக எடுத்து, லேசாக மாவு தொட்டு, சிறிது மொத்தமாக தேய்த்து, தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
|
குறிப்பு:
மட்டன் கலவையில் தண்ணீர் அதிகமிருந்தால், சிறிது நேரம் அடுப்பில் வைத்து, கலவை திக்கானதும், மாவு சேர்த்து பிசையவும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
20 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
28 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -
32 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
53 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
54 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 52 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -