உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பட்டாணி பாத்



தேவையான பொருட்கள்

  • அரிசி - 1/4 கிலோ,
  • துவரம் பருப்பு - 150 கிராம்,
  • கத்தரிக்காய் - 2,
  • உருளைக்கிழங்கு - 1,
  • கேரட் - 1,
  • பச்சை பட்டாணி - 1 கப் (1/4 கிலோ),
  • புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு,
  • பெரிய வெங்காயம் - 1,
  • தக்காளி - 2,
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • உப்பு - தேவைக்கேற்ப.
  • வறுத்து பொடிக்க:
  • ----------------------
  • காய்ந்த மிளகாய் - 6,
  • தனியா - 2 தேக்கரண்டி,
  • பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி,
  • கசகசா - 1 தேக்கரண்டி,
  • மராட்டி மொக்கு - 1,
  • மிளகு - 1/2 தேக்கரண்டி,
  • தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி,
  • தாளிக்க:
  • -----------
  • கடுகு - 1/2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • கொத்தமல்லி தழை - சிறிது,
  • பெருங்காயம் - சிறிது,
  • நெய் - 3 ஸ்பூன்,
  • எண்ணெய் - 3 ஸ்பூன்.

செய்முறை

  • அரிசியையும் பருப்பையும் ஒன்றாக கலந்து கழுவி, ஒன்றுக்கு இரண்டரை மடங்கு தண்ணீர் வைத்து குக்கரில் 3 விசில் விட்டு குழைய வேக விட்டு எடுக்கவும்.
  • வெந்த சாதத்தை லேசாக மசிக்கவும்.
  • வறுக்கக் கொடுத்துள்ளவைகளை 1/2 ஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடித்து வைக்கவும்.
  • புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கவும்.
  • உருளைக்கிழங்கு, கேரட்டை தோல் சீவி, துருவி வைக்கவும்.
  • புளித்தண்ணீரில் உப்பு, எல்லா காய்களையும், பட்டாணியையும் சேர்த்து வேக விடவும்.
  • வெந்ததும் பொடித்த பொடியை சேர்த்து ஒரு கொதி விடவும்.
  • மசித்த சாதத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். (சாதம் தளர இருக்க வேண்டும்)
  • வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, ஒரு கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாதத்தில் கொட்டி கிளறவும்.
  • கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு:

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

3 நபர்களுக்கு. 30 நிமிடங்கள்.
  random food image


comments
செல்வி அக்கா
நவம்பர் 24, 2008 - 9:36pm - வழங்கியவர் rasia

எப்படி இருக்கீங்க?உடம்பு தேவலாமா?நான் அனுப்பிய மெய்ல் பார்த்தீர்களா?அப்புறம் நான் இந்தவாரம் உங்கள் சமைய்யல் குறிப்புகள் சில செய்வதர்க்கு ஆயத்தமாயுள்ளேன்,அதில் இதுவும் ஒன்று,சந்தேகம் என்னன்னா மராத்திமொக்கு?அப்படின்னா அன்னாசி மொக்கா?பூ?அன்னாசிபூவையும் சிலர் மராத்திமொக்குன்னு சொல்றாங்க கொஞ்சம் விளக்குவீர்களா?

ரசியாக்கா!!!
நவம்பர் 24, 2008 - 9:44pm - வழங்கியவர் இலா

மராத்தி மொக்கு= அன்னாசி மொக்கு= படியான் ( Badiyaan) = ஸ்டார் அனீஸ் (Star Anise)

படம் பாருங்க...
http://www.uni-graz.at/
~katzer/engl/Illi_ver.html

மராட்டி மொக்கு...
நவம்பர் 25, 2008 - 3:02am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு ரஸியா,
நலமா? இப்ப பரவாயில்லை. விளக்கம் மெயிலில் அனுப்புகிறேன்.
மராட்டி மொக்கு வேறு.மல்லிகை மொக்கை காய வைத்தால் எப்படி இருக்குமோ அது போல கருப்பாக இருக்கும்.
அன்னாசிப்பூ பிரவுன் கலரில் ஆறு இதழ்களை ஒட்டியது போல இருக்கும்.கிடைக்கலைன்னா, அதை விட்டு கிடைத்ததை போடுங்கள். போதும்.
நன்றி இலா, லிங்க் கொடுத்ததற்கு.
அன்புடன்,
செல்வி.

நன்றி இலா
நவம்பர் 25, 2008 - 2:31pm - வழங்கியவர் rasia

லின்க் அனுப்பியமைக்கு மிக்க நன்றி!என்னிடம் அன்னாசிப்பூ தான் உள்ளது!

செல்வி அக்கா
நவம்பர் 25, 2008 - 2:33pm - வழங்கியவர் rasia

நல்லா இருக்கேன் அக்கா!இங்கு அது கிடைக்காது,ஆகவே நீங்கள் சொன்னபடி அது இல்லாமல் முயற்ச்சி செய்ய போகிறேன்,ரொம்ப நன்றி அக்கா உங்கள் விளக்கத்திர்க்கு!

செந்தமிழ் அக்கா
நவம்பர் 28, 2008 - 10:21am - வழங்கியவர் rasia

அக்கா,எப்படி இருக்கீங்க நிஷா வந்துட்டு போயிட்டாங்க போலிருக்கு இன்னும் சகஜ நிலை வரவில்லை தானே?அம்மாவும் சொன்னார்கள் இன்னும் எலெக்ட்ரிக் வரவில்லை என்று!அப்புறம் அக்கா நான் பட்டானி பாத்தை செய்துவிட்டேன் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது எனக்கும் வீட்டில் எல்லோருக்கும் பிடித்துவிட்டது,நான் உருளையையும் கேரட்டயும் துருவாமல் சின்ன துண்டாக நறுக்கிப்போட்டேன்,ஆனால் நீங்கள் சொன்னது போல் துருவிபோடனும் அடுத்தமுறை!ஆமாம் அக்கா இனி எங்கள் வீட்டு சமைய்யலில் இனி உங்கள் பட்டானி பாத்தும் அடிக்கடி இடம்பெறும்!மராத்திமொக்கு இல்லாமலேயே நன்றாக இருக்கிறதே!இன்னும் அதுவும் சேர்ந்தால்?மிக்க நன்றி அக்கா!

பட்டாணி பாத் ...
நவம்பர் 28, 2008 - 1:28pm - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் ரஸியா,
நலம், நீ எப்படி இருக்கே? நிஷா வந்திட்டா, இன்னும் முழுசா வெளில போகல. எப்ப கரண்ட் இருக்கும், எப்ப போகும்னு சொல்ல முடியாது. அடிக்கடி கட் ஆகுது. தண்ணீர் இல்ல, பால் இல்ல. செய்திகள் பார்க்க டிவி கூட கிடையாது. ஒக்கே.
பட்டாணி பாத் வீட்டில எல்லோருக்கும் பிடிச்சது ரொம்ப சந்தோஷம். அடுத்த முறை துருவி போட்டு செய்து பார், இன்னும் சுவையாக இருக்கும். மராத்தி மொக்கு இருந்தா இன்னும் வாசனை தூக்கும்.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.