ஆலு சிக்கன் |
|
|
|
தேவையானப் பொருட்கள்
- கோழி தொடைக்கறி - 4
- இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- ரெட் கலர் தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
- உருளைக்கிழங்கு - 1
- கார்ன்ஃப்ளார் - 1 மேசைக்கரண்டி
- முட்டை - 1
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிக்க
|
தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
|
 |
உருளைக்கிழங்கை தோல் சீவி, துருவி வைக்கவும்.
|
 |
கறியைக் கழுவி சுத்தம் செய்து, கறியுடன் 1/2 டம்ளர் தண்ணீர், இஞ்சி, பூண்டு விழுது, ரெட் கலர் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்கி, அடுப்பில் வைத்து தண்ணீர் வற்றும் வரை புரட்டி, புரட்டி வேக விட்டு எடுக்கவும்.
|
 |
துருவலை தண்ணீரில் அலசி பிழிந்து, உலர விட்டு, அத்துடன் கார்ன்ஃப்ளார் மாவை கலந்து வைக்கவும்.
|
 |
முட்டையை உடைத்து நுரை வர அடிக்கவும்.
|
 |
வெந்த கறியை ஒவ்வொரு துண்டுகளாக முட்டையில் நன்கு நனைக்கவும்.
|
 |
நனைத்த துண்டுகளை உருளைக்கிழங்கு துருவலில் நன்கு புரட்டவும்.
|
 |
பிரட்டிய துண்டுகளை எண்ணெய்யில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
|
 |
தந்தூரி சிக்கன் போல ருசியான ஆலு சிக்கன் ரெடி.
|
 |
அறுசுவையில் 400 க்கும் அதிகமான குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இன்னும் ஏராளமான குறிப்புகளை அறுசுவை நேயர்களுக்கு வழங்கவிருக்கின்றார்.
|
 |
|
|
|
|
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நொடி முன்பு -
19 நொடிகள் முன்பு -
2 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் 31 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
9 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
14 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -
14 நிமிடங்கள் 51 நொடிகள் முன்பு -
18 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -