நெய் சிக்கன்

தேதி: March 5, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழிக்கறி - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 3,
தயிர் - 3 தேக்கரண்டி,
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தனியா தூள் - 2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி,
முந்திரி - 15,
நெய் - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி - சிறிது,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
கசகசா - 1 தேக்கரண்டி,
பட்டை - 1 துண்டு,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,


 

கோழியை சுமாரான துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய், கசகசா, முந்திரி சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும், சிக்கன் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
1 நிமிடம் வதக்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
அதனுடன் தயிர் சேர்த்து கிளறி, அரைத்த விழுது சேர்த்து வதக்கி, 1 தம்ளர், உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
சிக்கன் வெந்து, மசாலா சுருண்டு வந்ததும், உருக்கிய நெய், கொத்தமல்லி தூவி இறக்கவும்.


நெய் மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த சிக்கனை சாதம், ரொட்டி போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Really a tasty dish it was. enjoyed a lot

MRS.SENTAMILSELVI.VANAKAM.THANKAL ENTHA SYALMURAIL.MALIDULL,MANGELDULL,MELAKAIDULL,EAPADISARKAWANDUM ENDRU KURPEDAVELAI.திருமதி செந்தமிழ்செல்வி செய்முரையில் மஞ்சள்தூள்,மல்லிதூள்,மிளாகயிதூள்,குரிபிடவில்லை

அறுசுவை தேன் சுவை

அன்பு சகோதரர் ஹமீது,
மன்னிக்கவும். தவறுதலாக விடுபட்டுப் போயிற்று. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இப்போது தவறு சரி செய்யப்பட்டுள்ளது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரரே,
நலமா?
பட்டர் சிக்கன் வேறு, நெய் சிக்கன் வேறு.

பட்டன் சிக்கன் எலும்பு இல்லாத சிக்கனில் செய்வோம். ரொம்ப சாஃப்டாக இருக்கும். அதற்கு நெய் சேர்க்க மாட்டோம், பட்டர்தான் சேர்ப்போம்.

நெய் சிக்கனில் உருக்கிய நெய்யை கடைசியில் சேர்க்க வேண்டும். நெய் மணத்துடன் நெய்யில் பொரித்தது போல இருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரரே,
என்னுடைய குறிப்புகளில் எண்ணெய் குறைவாக டயட்டில் இருப்பவர்களும் சாப்பிடக்கூடிய வகையில் சிக்கன் செய்முறைகள் கொடுத்துள்ளேன். சுகர், பிபி, கொலஸ்ட்ரால் இல்லையெனில் வாரம் இருமுறை கொழுப்பு நீக்கிய சிக்கன், மீன் தாராளமாக சாப்பிடலாம். டயட்டுக்கான சார்ட் ஒன்று தயாரித்து, வீடு கட்டும் வேலைப்பளுவால் முழுமை அடையாமல் நிற்கிறது. கூடிய விரைவில் பாபுவிடம் கொடுக்க முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி, இன்றைக்கு இப்போ தான் நெய் சிக்கன் செய்து முடித்தேன் ரொம்ப ருசியாக இருக்கின்றது, அரைக்கிலோ சிக்கன் நமக்கு காணாது ஆகவே இன்னும் அரைக்கிலோக்கு மேல் சேர்த்து தான் செய்தேன்.உன்னுடைய புல்கா குறிப்பையும் எடுத்து வைத்துள்ளேன் நேரமிருந்தால் சாயந்திரம் செய்வேன், இல்லையென்றால் சாதத்தோடு சாப்பிடுவோம்,சுவையான குறிப்பிற்கு நன்றி.

அன்பு தோழி மனோகரி.
நெய் சிக்கன் புல்காவுடன் இன்னும் நல்லா இருக்கும். பாராட்டுக்கு நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விமா நெய் சிக்கன் ரொம்ப நல்லா இருந்ததும்மா.......தேங்ஸ்மா...ஃபுல்காவுடன் சாpபிட்டோம்.

அன்பு தனு,
நலமா? கல்யாண நாள் நல்லா ஜாலியா போச்சா? பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.