உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

உருளைக்கிழங்கு வறுவல்



தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
  • காய்ந்த மிளகாய் - 1,
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி,
  • மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
  • தேங்காய்ப்பால் - 1/2 கப் (100 மில்லி),
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
  • கறிவேப்பிலை - 10,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • உருளைக்கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளிக்கவும்.
  • காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • தேங்காய்ப் பாலை ஊற்றி மூடி வைக்கவும்.
  • உருளைக்கிழங்கு வெந்ததும், தீயை குறைத்து, நன்கு வறுவலாக வரும் வரை கிளறி இறக்கவும்.

குறிப்பு:

சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு. 15 நிமிடங்கள்.
  random food image


comments
குறையொன்றுமில்லை.
நவம்பர் 25, 2008 - 9:51am - வழங்கியவர் அதிரா

செல்வியக்கா, நேற்று செய்துவிட்டேன், அட்மினின் ஆலோசனைப்படி ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்துள்ளேன். சூப்பர் சுவை. குறையொன்றுமில்லை.

மேலே தேவையான பொருட்களில் பூண்டு போடவில்லை, கவனித்துத் திருத்துங்கோ. நான் போட்டேன். குறிப்பு வெளியானதும் பாருங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உருளைக்கிழங்கு வறுவல்...
நவம்பர் 25, 2008 - 10:14am - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் அதிரா,
பரவாயில்ல, எனக்கு ஒரு வேலை மிச்சம் பண்ணிட்டே. படங்களை அட்மினுக்கு அனுப்பு. பார்க்கிறேன். ரொம்ப நன்றி, பூண்டு குறிப்பில்
சேர்க்க மறந்ததை குறிப்பிட்டதற்கு. இப்ப மாத்திடலாம். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

உருளை வறுவல்
நவம்பர் 30, 2008 - 7:28am - வழங்கியவர் mptindira

மேடம் சூப்பர் ரெசிப்பி. சுவையும் மணமும் மேலும் மேலும் சாப்பிட தூண்டியது. கோவில் புளியோதரைக்கு நல்ல காம்பினேசன்.

இப்படிக்கு
இந்திராஅ

உருளை வறுவல்
டிசம்பர் 1, 2008 - 2:45pm - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் இந்திரா,
பாராட்டுக்கு ரொம்ப நன்றி. புதுப்புது காம்பினேஷன் கண்டுபிடிக்கறே. சூப்பர்.
அன்புடன்,
செல்வி.

உருளை வறுவல்
டிசம்பர் 1, 2008 - 11:45pm - வழங்கியவர் vinnie

செல்விக்கா, இந்த உருளை வறுவலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வெங்காயம், தக்காளி அறியும் வேலையின்றி செய்வதற்கு மிகவும் எளிதாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

உருளை வறுவல்...
டிசம்பர் 2, 2008 - 2:47am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு வானு,
ஆமாம்ப்பா, தேங்காய்ப்பால் மட்டும் இருந்தால் போதும். சுலபமா செய்யலாம். நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

உருளை வறுவல்
டிசம்பர் 3, 2008 - 6:20pm - வழங்கியவர் admin

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த உருளக்கிழங்கு வறுவலின் படம்

picture