சேப்பங்கிழங்கு வறுவல்

தேதி: March 5, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ,
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

சேப்பங்கிழங்கை அரிசி கழுவிய நீரில் வேக வைத்து, தோல் உரிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வேக வைத்த சேப்பங்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறவும்.
தீயை குறைத்து வைத்து எண்ணெயில் நன்கு முறுகலாகும் வரை கிளறி இறக்கவும்.


சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்னைக்கு காலையில சேப்பங்கிழங்கு வறுவல் செய்தேன்.. நீங்கள் சொல்லியிருக்கறபடி அரிசி கழுவிய தண்ணீரில்தான் வேக வைத்தேன்..ஆனால் எனக்கு அந்த கிழங்கை சாப்பிட்ட போது நாக்கு அரித்தது

எதனால் அரிசி கழுவிய தண்ணீரில வேகவைக்கிறோம் ? நாக்கு அரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

நன்றி மேடம்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

அன்பு சங்கீதா,
அரிசி கழுவிய தண்ணிரில் வேக வைப்பதே அரிப்பை போக்கத்தான். அப்படியும் அரிக்குதுன்னா, அது புது கிழங்கா இருக்கும். பார்க்கவே புதிது போல இருந்தால், ஒரு கொட்டை புளியும் சேர்த்து வேகவைத்தால் அரிக்காது. எப்போதுமே சேப்பங்கிழங்கை வாங்கி ஒரு வாரம் கழித்து சமையுங்கள். பழசாகி அரிப்புத் தன்மை அடங்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மன்னிச்சுக்கோங்க... திரும்பவும் சந்தேகம்.. ஒரு கொட்டை புளி என்றால் கொஞ்சம் புளியா அல்லது கொட்டை எடுக்காத புளியா ? சிரிக்காதீங்க :-)

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா,
சிரிக்காதீங்கன்னு சொன்னாலும் சிரிச்சுகிட்டே தான் அடிக்கிறேன். கொஞ்சம் புளியைத்தான் அப்படி சொல்வாங்க. புளி தான். கொட்டையுடன் அல்ல.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

:-)

அடுத்த முறை செய்து பார்க்கிறேன் புளி சேர்த்து

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

செல்வி மேடம், இன்று மோர் குழம்புடன் சேப்பங்கிழங்கு வறுவல்.
வேக வைத்து உரித்து, எண்ணெயில் வறுத்து விட்டேன். நன்றாக இருந்தது, நன்றி.

சங்கீதா ஒரு சின்ன சந்தேகம்,
சேனைகிழங்கு, கருணை கிழங்குதான் அரிக்கும், சேப்பங்கிழங்கு அரிக்காதே.

கருணைகிழங்குதான் சமைக்கும்போது புளி சேர்த்து சமைப்பார்கள் என்று நினைக்கிறேன்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாலக்ஷ்மி,
பாராட்டுக்கு நன்றி.
மோர் குழம்பு + சேப்பங்கிழங்கு நல்ல காம்பினேஷன்.
சேப்பங்கிழங்கும் கொஞ்சம் புதியதாக இருந்தால் அரிக்கும். வாங்கி சில நாட்கள் கழித்து செய்வது நல்லது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.