தேவையானப் பொருட்கள்
- புளிப்பு மாங்காய் - 1,
- பச்சை மிளகாய் - 4,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி,
- பெருங்காயம் - சிறிது,
- தேங்காய் - 1/2 மூடி,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை
- மாங்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, துருவிய மாங்காய், பச்சை மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
- ஆறியவுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
-
குறிப்பு
சாதத்தில் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு |
10 நிமிடங்கள். |