இறால் சேம்பு குழம்பு

இறால்-அரை கிலோ
சின்னவெங்காயம்-6
தக்காளி-இரண்டு
பூண்டு-2பற்கள்
வெந்தயம்-4
சேம்மை கிழங்கு -7
முருங்கைக்காய்-இரண்டு
மஞ்சத்தூள்-அரைத்தேக்கரண்டி
எண்ணெய்-இரண்டி மேசை கரண்டி
மிளகாய்த்தூள்-இரண்டு தேக்கரண்டி
துருவியதேங்காய்-இரண்டு மேசை கரண்டி
கொத்துமல்லி-இரண்டு தேக்கரண்டி
உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
புளி - ஒரு நெல்லி அளவு
கறிவேப்பிலை-ஒரு கொத்து.
செய்முறை
தனியாக சேம்மைகிழங்கை குக்கரில் வேக வைத்து கொள்ளலாம்.
இறாலை நன்கு சுத்தம் செய்துக்கொள்ள்வும்.
புளி ,தேங்காயை மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம்,பூண்டைகறிவேப்பிலை நசுக்கி கொள்ளவும்.
சின்னவெங்காயம், தக்காளியை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி அதில் வெந்தயம், வெங்காயம்,கறிவேப்பிலை,போட்டு வருக்கவும்,பிறகு
தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு எல்லாத் தூள்வகைகளைவும் போட்டு கிளறிவிட்டு அரிந்து வைதுள்ள முருங்கைகாயை போட்டு 1 கோப்பை தண்ணீரை ஊற்றவும்.நன்கு கலக்கி விட்டு உப்புத்தூளை போட்டு வேகவைக்கவும்.காய் நன்கு வெந்தவுடன்,தேங்காய் விழுதையும் சேர்க்கவும்.பிறகுஇறாலை போடவும்,இறால் வெந்தவுடன் கடைசியாக வேக வைத்த சேம்மைகிழங்கையும் சேர்க்கவும்.இரண்டு நிமிடம் வைத்திருந்து, கொஞ்ம் கட்டியான உடன் இறக்கிவிடவும்.

மேலும் சில பதிவுகள்