மரக்கறி பாஸ்ரா

தேதி: March 6, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாஸ்ரா - அரை கிலோ
குடைமிளகாய் - மூன்றிலும் பாதியளவு
(சிவப்பு, மஞ்சள், பச்சை)
காரட் - ஒன்று
பச்சை பட்டாணி(புரோசன்) - அரை டம்ளர்
சோளம்(புரோசன்) - அரை டம்ளர்
ஸ்பிரவுட்ஸ் - 10
செத்தல் மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - ஒன்று
உள்ளி, இஞ்சி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
ஸ்வீட் சில்லி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - வதக்க


 

ஒரு பாத்திரத்தில் பாஸ்ரா மூழ்கக்கூடிய அளவிற்கு தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க விடுங்கள், கொதித்ததும் உப்பு சேர்த்து பாஸ்ராவை போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் அல்லது மாஜரீன் போடவும்.
பாஸ்ரா அவிந்ததும் (8-10 நிமிடங்கள்) வடித்து, பின் குளிர்நீர் விட்டு வடித்து, ஒரு தட்டில் பரவி வையுங்கள்.
மரக்கறிகளை ஓரளவு சிறிய துண்டுகளாக வெட்டி கொஞ்சம் உப்பிட்டு வையுங்கள்.
பச்சை பட்டாணி, சோளம் இரண்டையும் குளிர் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
மிளகாயை மூன்று அல்லது நான்கு துண்டுகளாக வெட்டி, விதைகளை வெளியே கொட்டி விடவும்.
வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி, இரண்டையும் சேர்த்து ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வதக்கவும்.
வதங்கியதும், உள்ளி, இஞ்சி பேஸ்ட் சேர்த்து கிளறி, மரக்கறிகளை கொட்டி பிரட்டி, 2 நிமிடங்களுக்கு மூடி விடவும். பின்னர் சோளம், பட்டாணி சேர்க்கவும்.
மெதுவாக பிரட்டி விடவும். காரட் அவிந்த பதம் வந்ததும், பாஸ்ராவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பிரட்டவும்.
இப்போ சோயா சாஸ் சேர்த்து பிரட்டி, உப்பைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். குக்கரால் இறக்கி ஸ்வீட் சில்லி சாஸ் சேர்த்து விடுங்கள்.


வதக்குதல் தொடங்கி முடியும் வரை நெருப்பை குறைத்தே வைத்துக் கொள்ளுங்கள். மரக்கறிகள் நன்கு வதங்க வேண்டியதில்லை. இப்போ கடைகளில் பல வடிவங்களில் பல நிறங்களில் பாஸ்ரா கிடைக்கிறது. எனவே 3,4 நிறங்கள், வடிவங்களை கலந்தெடுங்கள். பாஸ்ரா ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி இருந்தால், கையில் குளிர் நீரைத் தொட்டு பிரித்துக் கொள்ளலாம்.(ஸ்பிரவுட்ஸ் என்பது எலுமிச்சை அளவில் இருக்கும் சிறியவகை கேபேஜ்(கோவா)).

மேலும் சில குறிப்புகள்


Comments

இது frozen பட்டானி சோளம்,பாஸ்தா pasta தானே அதிரா..ப்ரேகெட்டில் போடுவதை ஆங்கிலத்தில் போட்டால் கொஞ்சம் புரிஞ்சுக்க ஈசி அதிரா..இன்னொன்று sprouts aa??
மரக்கறி என்பது காய்கறிகளா

ரூபி,
sprouts என்பது brussel sprouts குட்டி முட்டைகோஸ்,நம ஊர்லேயே இருக்கு.

நாங்க எல்லாம் இத செய்ய முடியாது போல இந்த குட்டி முட்டை கோஸ் இங்க கிடைக்குதான்னு தெரியலயே. எனக்கு நிறைய பொருட்கள் புரியவே இல்ல.

இதுக்கு இன்னொரு பெயர் கலைகோஸ்.

ஹாய் ஹிபா புரிஞ்சு போச்சு..இங்கயும் கிடைக்குது..பொன்னு எப்டி இப்ப?ரொம்ம்ப குறும்பா?இப்ப என்ன செய்ரா

ஐயையோ எல்லாரும் என்னை மன்னித்துக்கொள்ளுங்க. இன்று நான் வீட்டில் இருக்கவில்லை. அதனால் இப்போதுதான் பார்க்கிறேன். அது sprouts தான். cabbage ai விட இது கொஞ்சம் சுவை அதிகமாக இருக்கும். கரையாது. அதுதான் போடவேண்டுமென்பதில்லை விரும்பினால் முட்டைக்கோவா கொஞ்சம் மெல்லியதாக வெட்டிப் போடலாம். சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள். நான் சொல்கிறேன். எங்கள் வீட்டில் இது அடிக்கடி செய்வேன். மரக்கறி என்றால் காய்கறிதான். விரும்பினால் சிக்கின்,றால் வேறு பாத்திரத்தில் வதக்கி, இதனுடன் சேர்த்துக் கிளறிவிடலாம். இதில் குறிப்பிட்ட அனைத்தும் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.
தளிகா, நான் ஆங்கில வார்த்தைகள் சேர்க்கக் கூடாதென்ற பயத்தில்தான் எல்லாமே தமிழில் எழுதினேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நேற்று உங்க மரக்கறி பாஸ்ரா செய்தேன். ஃப்ரசல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் மட்டும் இல்லை. ரொம்ப நல்ல சுவையுடன் இருந்தது. இப்ப எல்லாம் வாரத்தில 2 நாள் பாஸ்தா.

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

செய்தீங்களா? மிக்க நன்றி. நான் நேற்று செய்தது, இப்பவும் கொஞ்சம் உள்ளே இருக்கு. சிலவேளைகளில், மிக்ஸ் வெஜிடபிள் பக்கட்டை வாங்கி இதே முறையில் செய்வேன். இப்படிச் செய்வதால், மரக்கறி சாப்பிடாதவர்களும் சாப்பிட்டு விடுவார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா உங்களுடைய குறிப்பில் மரக்கறி பாஸ்ரா மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"