உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

புழுங்கல் அரிசி முறுக்கு



தேவையானப் பொருட்கள்

  • புழுங்கல் அரிசி - 4 டம்ளர்
  • பொட்டுக்கடலை - 1 டம்ளர்
  • எள் - 2 டீஸ்பூன்
  • ஓமம் - 2 டீஸ்பூன்
  • வெண்ணெய் - 50 கிராம்
  • பெருங்காயம் - சிறிது
  • எண்ணெய் - சுடுவதற்கு
  • உப்பு - தேவையான அளவு
அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்து வைக்கவும். எள்ளையும் ஓமத்தையும் தண்ணீர் ஊற்றி, கழுவி, கல் அரித்து தேய்த்து எடுக்கவும்.
step 1
அரிசியை கிரைண்டரில் போட்டு கெட்டியாக, நைசாக அரைக்கவும். எடுப்பதற்கு சிறிது நேரம் முன்பு, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். (காரம் தேவைப்படுபவர்கள் 10 காய்ந்த மிளகாய் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.)
step 2
அரைத்த மாவுடன் பொட்டுகடலை மாவு, எள், ஓமம், வெண்ணெய் போட்டு நன்றாக பிசையவும்.
step 3
தேன்குழல் அச்சில் போட்டு முறுக்குகளாக பிழியவும்.
step 4
பிழிந்த முறுக்குகளை காய்ந்த எண்ணெயில் போட்டு சுட்டு எடுக்கவும்
step 5
சுவையான, மொறு மொறு புழுங்கல் அரிசி முறுக்கு ரெடி.
step 6
அறுசுவையில் 400 க்கும் அதிகமான குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இன்னும் ஏராளமான குறிப்புகளை அறுசுவை நேயர்களுக்கு வழங்கவிருக்கின்றார்.
step 7


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
சூப்பர் முருக்கு
மார்ச் 8, 2008 - 8:21am - வழங்கியவர் Jaleela Banu

வாவ் செல்வி மேடம் சூப்பர் முருக்கு
இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஜலீலா

செல்வி ரொம்ப நல்ல இருக்கு
மார்ச் 8, 2008 - 9:44am - வழங்கியவர் Vijitvm

நான் என் வீட்டில் அடிக்டி பன்னக் கூடிய ஒரு ஸ்னாக். என் பொன்னுக்கு ரொம்ப பிடிக்கும். இது பார்த்தவுடனேயே சாப்பிடனும்போல் உள்ளது.

புழுங்கலரிசி
மார்ச் 8, 2008 - 3:57pm - வழங்கியவர் அதிரா

செல்வியக்கா பார்க்கவே அழகா ஆசையா இருக்கு. இன்று நானும் முறுக்கு செய்தேன் - கடலை மாவில். எனக்கு ஒரு சந்தேகம் புழுங்கலரிசி என்றால் என்ன பச்சை அரிசியா? அல்லது குத்தரிசியா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

முறுக்கு...
மார்ச் 9, 2008 - 1:04am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு ஜலீலா,
பாராட்டுக்கு நன்றி.

அன்பு விஜி,
இதை செய்வதற்கு மிகவும் கடினமல்ல. 1 மணி நேரத்தில் செய்து விடலாம். அப்படியே செய்து எடுத்துக்கிட்டு, அறுசுவைக்கு வாங்க (எங்களுக்கும் சேர்த்து!).

அன்பு அதிரா,
புழுங்கலரிசி என்பது boiled rice. பச்சரிசி என்பது raw rice.
புழுங்கலரிசியை தான் நீங்கள் குத்தரிசி என அழைக்கிறீர்களோ !.
நெல்லை அப்படியே அரைப்பது பச்சரிசி. நெல்லை வேகவைத்து, காய வைத்து அரைப்பது புழுங்கலரிசி.
தெளிவாக விளக்கி விட்டேனென்று நினைக்கின்றேன். நன்றி.
அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம்
மார்ச் 10, 2008 - 12:46am - வழங்கியவர் Nandhini29

இது போலத்தான் அம்மாவும் செய்வாங்க மேடம். நான் இதுவரை முறுக்கே செய்தது இல்ல மேடம். பர்ஸ்ட் டைம் உங்க குறிப்ப பார்த்து செய்ய போறேன். செய்துட்டு நிச்சயம் பின்னூட்டம் தரேன் மேடம். செய்யவே ரொம்ப பயமா இருக்கு வேஸ்ட் ஆகிட்டா என்ன பன்னறதுன்னு சரியா வருமா மேடம்.

பயப்படாதே நந்தினி...
மார்ச் 10, 2008 - 2:19am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு நந்தினி,
பயப்படாதே, தைரியமா செய். எண்ணெயில் போடும் போது கை பத்திரமா பார்த்து போடு, முதல் முறை என்பதால். வேஸ்ட் ஆகாது. முடிந்த வரை கொஞ்சமாக முதலில் செய்து பார். பொட்டுக்கடலை, வெண்ணெய் அளவு சரியாக இருந்தால் போதும், சரியாக வரும். உன்னோட அதிர்ஷ்டம் நான் லீவில் வீட்டில் இருக்கிறேன். எந்த சந்தேகம்னாலும் கேள், பதில் சொல்கிறேன். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம்
மார்ச் 10, 2008 - 2:52am - வழங்கியவர் Nandhini29

இன்னக்கி எங்க வீட்ல சிம்புள் மெனு தான் மேடம் அதான் இத செய்து பார்த்துடலாம்னு ஆரம்பிச்சேன் மாவு பிசைந்துட்டேன் மேடம் நீங்க சொன்ன அளவில் அப்படியே பாதி பாதி போட்டுக் கொண்டேன் சரி தானே மேடம். தோ முறுக்கு பிழிந்து சாப்பிட்டுட்டு சொல்ரேன் மேடம் இருங்க.

செல்விமா
மார்ச் 10, 2008 - 2:55am - வழங்கியவர் pradeebala

செல்விமா ஆன்லைனில் இருந்தால் கூளில் சாட் வாங்க

success success selvi madam
மார்ச் 10, 2008 - 3:06am - வழங்கியவர் Nandhini29

சக்ஸஸ் செல்வி மேடம் முறுக்கு நல்லா வந்துடுச்சி கொஞ்சம் crispness இல்லாதது போல இருக்கு ஆரிய பிறகு வருமா மேடம். நன்றி செல்வி மேடம் ரொம்ப. நீங்க இந்த குறிப்ப கொடுக்கலனா முறுக்கு செய்யவே எனக்கு தெரிஞ்சு இருக்காது மேடம். பர்ஸ்ட் டைம் நல்லா வந்துடுச்சுன்னு ஒரே குஷியா இருக்கேன் மேடம்.

முயற்சி வெற்றி...
மார்ச் 10, 2008 - 4:05am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு நர்மதா,
பாராட்டுக்கு நன்றி. வெண்ணெய் சிறிது கூடியிருக்கும்னு நினைக்கிறேன். அதுத்த முறை கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும். மற்றபடி டேஸ்ட் குறையாது. முதல் முயற்சியில வெற்றி அடைஞ்சதுக்கு வாழ்த்துக்கள். நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

செல்வி மா
மார்ச் 10, 2008 - 4:22am - வழங்கியவர் Nandhini29

என்ன செல்வி மா என் பெயர் நர்மதா இல்ல நந்தினி. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

மார்ச் 10, 2008 - 4:23am - வழங்கியவர் அதிரா

செல்வியக்கா, நீங்க இதைப் பார்ப்பீங்க என்றுதான் இங்கு கேட்கிறேன்.
முன்பு எங்கள் பக்கத்துவீட்டு ஆன்ரி ஒருவர் பாண் செய்வார் மிகவும் அருமை. அவர்கள் கடையில் வாங்குவதில்லை. செய்துதான் உண்பார்கள். எனக்கு செய்முறை சொன்னார். அப்போ சிறிய வயது சமையல் தெரியாது இன்றஸ்டும் இல்லை அதனால் மனதில் பதியவில்லை. இங்கு தேடினேன் குறிப்புகளில் இல்லைபோல் தெரிகிறது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லமுடியுமா? அல்லது இதைப் பார்க்கும் யாராவது சொன்னாலும் சந்தோசம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹலோ அதிரா
மார்ச் 10, 2008 - 4:29am - வழங்கியவர் Nandhini29

எப்படி இருக்கீங்க? நீங்க கேட்பது பாண் கேக் பற்றியா அதிரா. எனக்கு செய்யவெல்லாம் தெரியாது நீங்க கேட்பது பாண் கேக் என்றால் மனோகரி மேடம் கொடுத்து இருக்காங்க பான் செய்முறைன்னு இருக்கு பாருங்க அதிரா. அது இல்லன பரவாயில்லை.

ஹாய் நந்தினி
மார்ச் 10, 2008 - 4:34am - வழங்கியவர் அதிரா

ஹாய் நந்தினி உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. அது pan cake. நான் கேட்பது bread செய்யும் முறை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நந்தினி & அதிரா...
மார்ச் 10, 2008 - 5:03am - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் நந்தினி,
வெரி சாரி. நான் நோட்பேட்-ல அடிச்சு காப்பி பண்றதால பேர சரியா கவனிக்கல. நன்றி.

ஹாய் அதிரா,
நீங்க கேட்கறது பான் கேக் தான்னா? அப்டின்னா சகோதரி மனோஹரி சொன்ன குறிப்பே ரொம்ப நல்லா இருக்கும். அதே முயற்சி பண்ணலாம். இல்லன்னா வேற என்னன்னு இன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா உதவியாயிருக்கும். நன்றி.
அன்புடன்,
செல்வி.

selviyakka
மார்ச் 10, 2008 - 5:27am - வழங்கியவர் அதிரா

selviyakkaa, i want bread recipe please

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

முயற்சிக்கிறேன்...
மார்ச் 10, 2008 - 9:35am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு அதிரா,
நீங்கள் கேட்ட ரெசிபி எனக்குத் தெரிஞ்சதை தர முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புல்லா செல்விஅம்மா,
மார்ச் 11, 2008 - 8:27am - வழங்கியவர் anijaya

இந்த முருக்கு மிக மிக நன்றாக வந்ததூ மிக்க நன்றி.

அனிடா

நன்றி....
மார்ச் 12, 2008 - 10:48am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு அனிதா,
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

pulungal aresi murukku
மே 28, 2008 - 6:33pm - வழங்கியவர் P_WI

I tried this and turned out very good!!!

Thank you
Priya

புழுங்கல் அரிசி முருக்கு
ஜூன் 21, 2008 - 3:54am - வழங்கியவர் Jaleela Banu

செல்வி மேடம்.
என்ன இன்னும் களைப்பு தீரலையா?
ஆளையே காணும்.
புது வீடு எப்படி எல்லாம் செட் பண்ணியாச்சா?

புழுங்கல் அரிசி முருக்கு செய்து ஆர்த்தேன் நன்றாக வந்தது.
ஜலீலா

நன்றி பிரியா..
ஆகஸ்டு 20, 2008 - 4:15am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு பிரியா,
பாராட்டுக்கு மிக்க நன்றி.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
அன்புடன்,
செல்வி.

ஹாய்
ஆகஸ்டு 20, 2008 - 4:18am - வழங்கியவர் senthamizh selvi

ஹாய் ஜலீலா,
நலமா? இந்தியா விசிட் முடிஞ்சுதா? புது வீடு இன்னும் செட்டில் பண்ணலை. வேலை நடந்துகிட்டே இருக்கு.
களைப்பு தீர இன்னும் 6 மாதம் ஆகும் போல.
பசங்க நலமா?
பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

சூப்பர் முறுக்கு
அக்டோபர் 15, 2008 - 3:36pm - வழங்கியவர் kavisiva

செல்விம்மா இன்னிக்கு உங்க முருக்கு செய்தேன்.சூப்பரா வந்துது.தீபாவளிக்கு முன்னாடியே காலியாயிடும்னு நினைக்கிறேன்.தேங்க்ஸ்மா

நன்றி கவிசிவா...
அக்டோபர் 15, 2008 - 5:31pm - வழங்கியவர் senthamizh selvi

அன்பு கவி,
தீபாவளி உண்டோ, இல்லையோ வருஷா வருஷம் முறுக்கு செய்ய தவற மாட்டேன். 3லிட்டர் அரிசிக்கு குறையாமல் போடுவேன். அதுவே ஒரு ரவுண்டுக்கு தான் வரும். இந்த வருடம் எல்லாவற்றையும் இடுப்புவலி தான் செய்கிறது:-((

நிஜமாகவே ரொம்ப நல்லா இருக்கும் இந்த முறுக்கு. செய்வதும் எளிது. அதற்குள்ளேயே தீபாவளிக்கு பலகாரமா! பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.