கோதுமை ரவா பிர்ணி கஞ்சி

தேதி: March 6, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை ரவா- 1 கப்
பால்- 2 கப்
தேங்காய்ப்பால்- 1 கப்
முந்திரிப்பருப்பு- 10
திராட்சை- 2 மேசைக்கரண்டி
ஏலக்காய்- 3
பட்டை- 1
கிராம்பு- 2
நெய்- கால் கப்
சீனி- 1 கப்
ஓட்ஸ்- 2 மேசைக்கரண்டி


 

கோதுமை ரவாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கழுவி, அது மூழ்கும்வரை தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும்வரை வேக வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய்யை விட்டு அது சூடானதும் முந்திரிப்பருப்பையும் திராட்சையையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு சிவந்ததும் பாலையும் வெந்த கோதுமை ரவா, ஓட்ஸ் முதலியவற்றை சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும்.
சற்று கொதித்ததும் சீனியைச் சேர்த்து சில விநாடிகள் கொதிக்க விடவும்.
இறுதியில் முந்திரிப்பருப்பு, திராட்சை, தேங்காய்ப்பால் சேர்த்து, கொதி வருவதற்கு முன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்