உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

முளைக்கீரைக்கூட்டு

 


தேவையானப் பொருட்கள்

  • முளைக்கீரை- 1 கட்டு
  • வெந்த பருப்பு- கால் கப்
  • பொடியாக அரிந்த தக்காளி- அரை கப்
  • சிறிய வெங்காயம்-8
  • கடுகு- 1 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
  • சோம்பு- அரை ஸ்பூன்
  • தேங்காய்த்துருவல்- அரை கப்
  • தேவையான உப்பு
  • எண்ணெய்- 2 மேசைக்கரண்டி

செய்முறை

  • ஒரு வாணலியை சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.
  • கடுகைப் போட்டு அவை வெடித்ததும் உளுத்தம்பருப்பைப்போட்டு சற்று வறுக்கவும்.
  • பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பிறகு தக்காளியைச் சேர்த்து அது மசியும்வரை வதக்கவும்.
  • கீரையைப் பொடியாக அரிந்து சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
  • கீரை பாதி வெந்ததும் தேங்காயையும் சோம்பையும் மிளகாய்த்தூளையும் மையாக அரைத்துச் சேர்க்கவும்.
  • வெந்த பருப்பையும் சேர்த்து சில வினாடிகள் கொதிக்க விடவும்.
  • கீரை நன்கு வெந்ததும் இறக்கவும்.

random food image


comments