www.arusuvai.com
முளைக்கீரைக்கூட்டு
தேவையானப் பொருட்கள்
- முளைக்கீரை- 1 கட்டு
- வெந்த பருப்பு- கால் கப்
- பொடியாக அரிந்த தக்காளி- அரை கப்
- சிறிய வெங்காயம்-8
- கடுகு- 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
- சோம்பு- அரை ஸ்பூன்
- தேங்காய்த்துருவல்- அரை கப்
- தேவையான உப்பு
- எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
செய்முறை
- ஒரு வாணலியை சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.
- கடுகைப் போட்டு அவை வெடித்ததும் உளுத்தம்பருப்பைப்போட்டு சற்று வறுக்கவும்.
- பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பிறகு தக்காளியைச் சேர்த்து அது மசியும்வரை வதக்கவும்.
- கீரையைப் பொடியாக அரிந்து சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
- கீரை பாதி வெந்ததும் தேங்காயையும் சோம்பையும் மிளகாய்த்தூளையும் மையாக அரைத்துச் சேர்க்கவும்.
- வெந்த பருப்பையும் சேர்த்து சில வினாடிகள் கொதிக்க விடவும்.
- கீரை நன்கு வெந்ததும் இறக்கவும்.
-
-