சிக்கன் பொரியல்

தேதி: March 6, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

சிக்கன் சதை - 10
(அல்லது எலும்பு குறைந்த 2 அங்குல நீளமான துண்டுகளாக வெட்டவும்)
கறித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
உள்ளி, இஞ்சி பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
சோள மா - அரை கப்
உருளைக்கிழங்கு மா - அரை கப்
தேசிக்காய் - பாதி பழம்
வெள்ளை மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

சிக்கன் துண்டுகளை தோல் நீக்கி சுத்தம் செய்து, வெளிப்பகுதியை கூரான கத்தியால் கீறி அடையாளங்கள் போடவும்
தேசிச்சாறு, உப்பு, கறித்தூள், உள்ளி இஞ்சி பேஸ்ட் இவற்றை ஒன்றாகக் குழைத்து, அதில் சிக்கன் துண்டுகளை நன்கு பிரட்டி எடுத்து, ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
இருவகை மாவையும், மிளகு தூளையும் கலந்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
fryer தான் நல்லது. அல்லது சிக்கன் மூழ்கக்கூடிய அளவு எண்ணெய் விட்டு கொதித்ததும் அடுப்பை குறைத்து வைத்துக் கொள்ளவும்
சிக்கன் துண்டுகளை மாவில் மெதுவாக பிரட்டி எடுத்து, உடனேயே எண்ணெயில் போடவும்
நெருப்பைக் குறைத்து நன்கு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
நெருப்பு அதிகமானால் வெளிப்பகுதி உடனே கறுத்துவிடும்,உள்ளே சிக்கன் அவியாது. எனவே நெருப்பைக் குறைத்து மெதுவாக பிரட்டிப் பிரட்டிப் பொரித்தெடுக்கவும்.
இது KFC சிக்கனை விட சுவையாக இருக்கும்.


நெருப்பைக் குறைத்து வைக்கவும். பொரிக்கிறபோது, ஒன்றுக்குமேல் ஒன்றாகப் போடக்கூடாது. எண்ணெயில் போடும்போதுதான் மாவைப் பிரட்டவும், அதிகம் அமத்திப் பிரட்ட வேண்டாம். மெதுவாகப் பிரட்டினால் போதும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அதிரா கறித்துள் என்றால் கரம் மசாலா தானே?தேசிக்காய் என்றால் எலுமிச்சை தானே??உருளை மாவு என்பது புரியவில்லை.

தளிகா, கறித்தூள் என்றால் இலங்கைக் குறிப்பில் இருக்கிறது, இலங்கையில் அனேகமாக எல்லோரும். கறித்தூள் தான் உறைப்புக் கறிக்குப் பாவிப்போம். இதில் காய்ந்தமிளகாய், மல்லி, பெருஞ்சீரகம், நற்சீரகம், மஞ்சள், மிளகு அத்தனையும் கலந்திருக்கும். அதைத்தான் குறிப்பிட்டேன். நீங்கள் உங்கள் உறைப்புக் கறிகளுக்கு எப்படி மிளகாய் தூள்,மல்லித்தூள் சேர்ப்பீங்களோ அப்படி சேர்க்கலாம். கரம் மசாலா போடவேண்டாம். (1/2 தே.கரண்டி மஞ்சள்,1/2 தே.க மிளகு,1/2 தே.க மிளகாய் தூள் சேர்த்தாலும் பறவாயில்லை)
தேசிக்காய்-எலுமிச்சை
potato powder கடைகளில் கிடைக்கிறது, கிடைக்கவில்லையாயின் தனியே corn flour ஐப் பாவியுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிராக்கா,
அது என்ன கே.எஃப்.சி சிக்கன்?. ஜலீலா அவர்களின் லாலிபாப் சிக்கன் குறிப்பிலும் இவ்வாறு இருந்ததை பார்த்திருக்கிறேன்.

இப்படிக்கு
இந்திரா

indira

அதிரா உங்களுடைய குறிப்பில் சிக்கின் பொரியல்
மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"