சேமியா பிரியாணி

தேதி: March 9, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சேமியா -- 1 கப்
முந்திரி பருப்பு -- 10 என்னம்
சின்ன வெங்காயம் -- 15 என்னம் (வட்டமாக நறுக்கியது)
கேரட் -- 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் -- 1 டேபிள்ஸ்பூன்
பட்டாணி -- 2 டேபிள்ஸ்பூன்
பட்டை -- 1 அங்குலம் அளவு
கிராம்பு -- 2 என்னம்
பிரியாணி பொடி -- 1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது -- 1 டீஸ்பூன்
வெங்காயத்தாள் -- 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)


 

முதலில் வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சேமியாவை வறுத்து எடுக்கவும்.
அதே வாணலியில் முந்திரி பருப்பையும் வறுத்து எடுக்கவும்.
பின் அடி கனமான பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணைய் விட்டு பட்டை,கிராம்பு தாளித்து இஞ்சி,பூண்டு விழுது போட்டு பின் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் வேகவைத்த பீன்ஸ், கேரட்,பட்டாணி சேர்த்து வதக்கி தேவையான உப்பு போடவும்.
1 கப்பிற்கு 2 கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்ததும் பிரியாணி பொடி சேர்த்து நன்கு கலக்கிய பின் வறுத்த சேமியா சேர்த்து அதனுடன் வெங்காய்த்தாளையும் சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் சேமியா பிரியாணி ரெடி.


மேலும் சில குறிப்புகள்