நண்டு குழம்பு

தேதி: March 9, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

நண்டு -- 1 கிலோ
சாம்பார் பொடி -- 1 1/2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் -- 1 கப் (நறுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
அரைக்க -- 1:
சோம்பு -- 1 ஸ்பூன்
பூண்டு -- 10 பல்
அரைக்க -- 2 :
தேங்காய் -- 1 மூடி (தனியாக நைசாக அரைக்கவும்)


 

அடிகனமான பாத்திரத்தில் எண்ணைய் 2 ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி அதனுடன் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் அரைக்க - 1 யை சேர்த்து வாசம் போகும் வரை நன்கு வதக்கி பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் நண்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
2 நிமிடம் கழித்து அரைத்த தேங்காயை ஊற்றி கொதித்து குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

மிளகு, சீரகம், மஞ்சள் பொடி சேர்த்துக்கூட செய்யலாம். மஞ்சள் ஒரு கிருமி நாசினி. மிளகும் சீரகமும் சீரண சக்தியை அதிகப்படுத்தும்.
மகாலட்சுமி உஷா
சுகமான வாழ்க்கைக்கு
சுவையான சமையல்

சுகமான வாழ்க்கைக்கு
சுவையான சமையல்