உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

சிக்கன் கோகனெட் கபாப்



தேவையான பொருட்கள்

  • கோழிக்கறி - 1/4 கிலோ,
  • இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
  • மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
  • சீரக்த் தூள் - 1 தேக்கரண்டி,
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
  • தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி,
  • கார்ன்ஃபிளார் - 2 தேக்கரண்டி,
  • எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,

செய்முறை

  • கோழியை சுமாரான துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
  • தேங்காயை மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி நைசாக பொடிக்கவும்.
  • சிக்கனுடன் எல்லாப் பொருட்களையும் கலந்து எலுமிச்சை சாறு பிழிந்து 2 மணி நேரம் ஊற விடவும்.
  • எல்லாத்துண்டுகளையும் தேங்காய் பொடியில் புரட்டி ஒரு தட்டில் வைத்து, ஓவனில் 5 நிமிடம் வைக்கவும். திருப்பி விட்டு மீண்டும் 4 நிமிடம் வைக்கவும்.
  • இல்லையேல் கபாப் கம்பியில் குத்தி தணலில் சுடவும்.

குறிப்பு:

தேங்காய் மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த கபாப்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு. 2 மணி நேரம். 10 நிமிடங்கள்.
  random food image


comments