தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 3,
- கேரட் - 1,
- பச்சை பட்டாணி - 100 கிராம் (1/2 கப்),
- பீன்ஸ் - 6,
- காளி ஃபிளவர் - 1 கப்,
- பெரிய வெங்காயம் - 2,
- தக்காளி - 2,
- (தண்ணீர் கலக்காத) பால் - 200 மில்லி,
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
- கரம் மசாலா - 1 தேக்கரண்டி,
- கார்ன் ஃபிளவர் - 1 தேக்கரண்டி,
- வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
- உப்பு - தேவையான அளவு.
|
செய்முறை
- காய்கறிகளையும், வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
- வாணலியில் 1 தேக்கரண்டி வெண்ணெய் விட்டு, உருகியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- ஆறியதும், நைசாக அரைக்கவும்.
- வாணலியில் மீதி வெண்ணெய் விட்டு, நறுக்கிய காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
- காய்கள் அதிலேயே பாதி வெந்தது போலானதும், அரைத்த மசாலா, பால், கார்ன் ஃபிளார் மாவை 1/2 தம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- தணலை மிதமாக வைத்து அடிக்கடி கிளறி விடவும்.
- நன்கு கொதித்ததும், இறக்கவும் (தேவைப்பட்டால் கொத்தமல்லி தூவலாம்).
|
குறிப்பு:
சப்பாத்தி, பரோட்டா, புலாவ் போன்றவற்றிற்கு வெகு பொருத்தமாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
3 நபர்களுக்கு. |
20 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
7 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
24 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
29 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
45 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -
51 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -