தேவையான பொருட்கள்
- கோஃப்தாவுக்கு:
- -------------------
- பனீர் - 200 கிராம்,
- உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
- பச்சை மிளகாய் - 3,
- மைதா - 1/2 கப்,
- பிரட் தூள் - 1 கப்,
- முந்திரி - 8,
- உலர் திராட்சை - 25,
- வெண்ணெய் - 2 தேக்கரண்டி,
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
- உப்பு - தேவையான அளவு.
- கிரேவிக்கு:
- -------------
- பெரிய வெங்காயம் - 3,
- மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
- தனியாத்தூள் - 1 தேக்கரண்டி,
- முந்திரி - 15,
- கசகசா - 1 மேசைக்கரண்டி,
- பால் - 1/4 கப்,
- க்ரீம் - 100 கிராம்,
- உப்பு - தேவையான அளவு,
- வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
|
செய்முறை
- உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, அதனுடன் உப்பு சேர்த்து, கட்டி இல்லாமல், நைசாக பிசைந்து வைக்கவும்.
- பனீரை துருவி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், முந்திரி, திராட்சையுடன் கலந்து நெல்லிக்காயளவு உருட்டி வைக்கவும்.
- உருளைக்கிழங்கு கலவையை பெரிய எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து, ஒரு பனீர் உருண்டையை உள்ளே வைத்து, மூடி, கோஃப்தாக்களாக செய்யவும்.
- மைதாவை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், செய்து வைத்த கோஃப்தாக்களை மைதா கரைசலில் முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- முந்திரி, கசகசாவை வெதுவெதுப்பான பாலில் 1/2 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைக்கவும்.
- வாணலியில் வெண்ணெயை போட்டு, உருகியவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும், தனியா தூள், மிளகாய் தூள், அரைத்த கலவை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்ததும் இறக்கவும்.
- கோஃப்தாக்களை அடுக்கி, க்ரேவியை மேலாக விட்டு, க்ரீமை ஊற்றி அலங்கரிக்கவும்.
|
குறிப்பு:
பார்ட்டிக்கு பரிமாற மிகவும் ரிச்சாக இருக்கும். நாண், பரோட்டா, புல்கா, ஃப்ரைடு ரைஸ் போன்றவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு. |
30 நிமிடங்கள். |
30 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
10 நொடிகள் முன்பு -
19 நொடிகள் முன்பு -
3 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -
4 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
4 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
6 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
8 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
8 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
11 நிமிடங்கள் 17 நொடிகள் முன்பு -