பலாக்கொட்டைக்கறி

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய்த் துருவல் - 2 கப்
பலாக்கொட்டை - கால் கிலோ
முருங்கைக்காய் - 2
துவரம்பருப்பு - ஒரு கப்
பச்சைமிளகாய் - 5
மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய்பொடி - ஒரு மேசைக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கொத்தமல்லி விதை - ஒன்றரை மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

பலாக்கொட்டைகளை தோல் நீக்கிக் கொள்ளவும். தேவையெனில் சற்றுப் பெரியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்.
புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் தேங்காய்த் துருவல், மல்லி விதை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு பலாக்கொட்டைகளை அதில் போடவும்.
அதனுடன் துவரம்பருப்பு, பச்சைமிளகாய், மிளகாய்பொடி, மஞ்சள்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி பிறகு பாத்திரத்தை மூடி வேகவிடவும்.
மூன்று நிமிடங்களுக்கு பிறகு முருங்கைக்காய் மற்றும் புளிச்சாறு ஆகியவற்றை கல்ந்து கொதிக்கவிடவும்.
ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைச் சேர்த்துக் கிளறவும்.
முருங்கைக்காய் நன்றாக வேகும் வரை அடுப்பில் வைத்து அவ்வபோது கிளறிக் கொண்டே இருக்கவும்.
வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பிறகு அதிலேயே நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்ததை பலாக்கொட்டை மசாலாவில் கொட்டி கிளறிவிட்டுக் கொள்ளவும். சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்