பிரட் லட்டு

தேதி: March 10, 2008

பரிமாறும் அளவு: 20 லட்டு வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை பருப்பு - 100 கிராம்,
பிரட் ஸ்லைஸ் - 6,
வெல்லம் - 1/4 கிலோ,
தேங்காய் - 1/4 மூடி,
ஏலக்காய் - 4,
நெய் - 50 கிராம்.


 

கடலை பருப்பை கிள்ளு பதமாக வேக வைத்து, தண்ணீரை சுத்தமாக் வடித்து, மிக்ஸியில் உதிராக அரைத்து சிறிது நெய்யில் வதக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவி, சிறிது நெய்யில் லேசாக வறுத்து வைக்கவும்.
பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஓட்டினால பொலபொலன்னு வரும். அதையும் சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை தட்டி, சிறிது தண்ணீரை சேர்த்து, கரைத்து, வடிகட்டி அடுப்பில் வைக்கவும்.
கொதிக்கும் போது, அரைத்த கடலை பருப்பு, பிரட்,தூளாக்கிய ஏலக்காய், தேங்காய், மீதி நெய் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.
ஆறியவுடன் எழுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.


நெய்யில் வறுத்த பிரட் தூளில் புரட்டி எடுக்க பார்க்க அழகாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பிரட் லட்டு செய்து பார்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Tanks அக்கா.

ப்ரீதா

ப்ரீதா

நானும் என் fரென்ட்டும் ப்ரெட் லட்டு செய்து பார்தோம். மிகவும் நன்றாக இருந்தது. அனைவரும் ருசித்து உண்டனர்.
எங்கள் பக்கத்து வீட்டு மாமியும் சாப்பிட்டு பார்த்து நன்றாக உள்ளது என்றனர்.

ப்ரெட் லட்டு மிகவும் சூப்பர்....

Thanks & Regards By,
Kalaiyarasi G

Thanks & Regards By,
Kalaiyarasi G

செல்விஅக்கா உங்களுடைய குறிப்பில் பிரட்லட்டு மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"