ஸ்டஃடு பிரெட் பால்ஸ்

தேதி: March 10, 2008

பரிமாறும் அளவு: 10 உருண்டைகள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

பிரெட் - 10 ஸ்லைஸ்,
வெள்ளை சுண்டல் - 200 கிராம்,
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது),
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் -2,
கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது),
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.


 

சுண்டலை 8 மணி நேரம் ஊறவைத்து, மசிக்கும் அளவு வேக வைத்து, ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கை உதிர்த்து போட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பிரட் ஸ்லைசை ஓரத்தை வெட்டி விட்டு, தண்ணீரில் நனைத்தவுடன் பிழிந்து நடுவில் சுண்டல் உருண்டையை வைத்து மூடி, உருட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.


கொத்தமல்லி சட்னி, சாஸுடன் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வாவ் ரொம்ப நன்றாகவும் டேஸ்டியாகவும் கிர்ஸ்ப்பியாகவும் இருந்தது. நல்ல எளிமையான டிபன் இது என் வீட்டில் திடிர் கெஸ்ட் வந்தார்கள். உடனே இதை பார்த்து விட்டு 25 நிமிடம் எடுத்துகொண்டு செய்தேன். ரொம்ப நன்றி செல்வி மேம். நல்ல டிபன். எதேச்சியாக என்னிடம் கடலை குழம்புக்கா கொண்டை கடலை ஊறவைத்து ப்ரோசனில் வைத்து இருந்தேன் அதை எடுத்து இதற்க்கு யூஸ் செய்து அசத்திட்டேன். வந்த கெஸ்ட் எல்லாம் ரொம்ப நன்றாக இருந்தது என்று சொன்னாங்க & எல்லாமே நொடியில் காலி. உங்களுக்கு தான் நன்றி எல்லாம்.

அன்பு விஜி,
நலமா? இது நானே கண்டுபிடிச்ச குறிப்பாச்சே!!நல்லா இல்லாம இருக்குமா:-))
இது மில்கா பிரட் நடத்தின போட்டிக்கு செய்து எடுத்துட்டு போனேன். பரிசும் வாங்கினேன். வீட்டுக்கு ஒன்று கூட திரும்பி வரவில்லை. இப்பன்னா, இன்னும் கூட அசத்தி இருப்பேன். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எனக்கும் இங்கு உங்க இந்த ரெசிப்பி பார்த்து செய்த்துட்டு போனவுடன் ஒரே காம்பிளிமெண்ட்ஸ்+ ரெசிப்பி என்ன என்று கேட்டு துளத்தார்கள் நானும் கிட்டதட்ட 35 பால்ஸ் செய்தேன். நம்ப மட்ட்டிங்க ஒன்னு கூட பௌலில் இல்லை. எனக்கு ஒரே ஆச்சரியம் என் ஹஸ் கூட சொன்னார் வாவ் அடிக்கடி இனி செய்துகுடு நம்ம குழந்தைகளுக்கும் என்று. உங்களுக்கு டபிள் காம்பிளிமெண்ட்ஸ்.நான் இதே மாதிரி வெஜ் மஞ்ஜுரியன் செய்வேன். ஆனால் அதை விட இது ரொம்ப சூபார். நன்றி........நன்றி...

அன்பு விஜி,
நான் கூட இந்த குறிப்பை செய்து ரொம்ப நாளாச்சு. பிள்ளைங்க எல்லாரும் இருந்தா செய்ய நல்லா இருக்கும். கொஞ்சம் கஷ்டம் போல தோணினாலும், சுவை கஷ்டத்தை மறக்கடித்து விடும். ம்ம்ம், இனி அடிக்கடி செய்து அசத்து. நன்றி.
பி.கு: மெயில் பார்க்கலையா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேம் எனக்காக இந்த பனிர் டிக்க மாசாலா (dry) ஸ்னாக்கா சாப்பிட கூடியது ரெசிப்பி வேண்டும். டைம் கிடைக்கும் போது தாங்க. என் ஹஸ்ஸுக்கு ரொம்ப பிடித்தது. வாவ் அனுப்பிட்டிங்களா? மெயில் பார்க்கல்லை இப்ப பார்க்கறேன்.

உங்கள் பிரட் பால்ஸ் செய்தேன்.. என் கணவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

ஆனா ரொம்ப oil இருந்ததுன்னு என் கணவர் சொன்னாங்க...

பிரட்-ஐ தண்ணில நினைச்சி பிழிஞ்சா கூழ் மாதிரி ஆயிடுச்சு...அதனால அடுத்த slice லாம் ரொம்ப பிழியாம தண்ணியோட போட்டேன்...அதான் எண்ணெய் இழுத்திருச்சோ ?
ரொம்ப ஸாஃப்ட் பிரட் உபயோகிச்சிட்டேன்... :-(

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

இன்று இந்த ஸ்டஃப்டு பிரெட் பால் செய்து குழந்தைகளுக்கு பள்ளிக்கு அனுப்பினே.
ரொம்ப நல்ல இருந்தது.
ஜலீலா

Jaleelakamal

ஹாய்க்கா நானும் இன்று ஸ்டஃப்டு பிரெட் பால் மற்றும் ஸ்டஃப்டு பிரெட் பஜ்ஜி செய்தேன். இப்பதான் அட்மின் அவர்களுக்கு படத்தை அனுப்பினேன். அருசுவைக்கு வந்து பார்த்தா ஸ்டஃப்டு பிரெட் பால் என்ற ரிசென்ட் பதிவ பர்த்ததும் அதுக்குள்ள போட்டுடாரான்னு பாத்தா உங்க பதிவு. உங்களுக்கு எப்படிக்கா? எண்ணை குடிப்பதை எப்படி மேனஜ் பன்னீங்க.
செல்வி மேடம் எப்படி எண்ணை ப்ரொப்லத்த சரி பன்றது? சொல்லுங்க பிளீஸ்.

indira

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த ப்ரெட் பால்ஸ்ன் படம்

<img src="files/pictures/breadballs.jpg" alt="image" />

ஹாய் இந்திரா,
அழகா படமெடுத்து அனுப்பியிருக்கே. உனக்கும், அட்மினுக்கும் நன்றி.
ப்ரட்டை தண்ணீரில் நனைத்தவுடன் இறுக பிழிய வேண்டும். ப்ரட்டும் ரொம்ப சாஃப்டாக இல்லாமல், கொஞ்சம் தடிமனான ப்ரட்டாக இருந்தால் நலம். மில்க் பிரட் சரி வராது. சால்ட் பிரட், சாண்ட்விச் பிரட் வகைகள் சரியாக இருக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மீண்டும் நேற்று செய்தேன் நல்ல் க்ரிஸ்ப்பியாக வந்தது. நன்றி.

பாராட்டுக்கு நன்றி விஜி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா,
நேத்து evening tfn உங்க bread ballsதான். ஆனா, deep fry செய்யலை.உருண்டை புடிச்சதை அப்படியே,வடை போல தட்டி, தோசை கல்லில் சுட்டு எடுத்தேன்.நல்லா இருந்தது.நன்றி செல்விமா.

ஹாய் விஜி,
நலமா? ஐ, இந்த ஐடியா கூட நல்லாயிருக்கே! (உட்கார்ந்து யோசிப்பாங்களோ)
நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. ரேணுகா அவர்கள் தயாரித்த ப்ரெட் பால்ஸ்ன் படம்

<img src="files/pictures/stuffed_balls.jpg" alt="picture" />

அன்பு ரேணு,
பிரெட் பால்ஸ் பார்க்க நல்லா இருக்கு. நல்லா மெனக்கெட்டு இருக்கே.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அம்மா,இன்று உங்கள் பிரெட் பால்ஸ் செய்தேன்.என் அண்ணனுக்கு மிகவும் பிடித்திருந்தது.இது 2 வது முறை.இந்த தடவை சிக்கனில் செய்தேன்.சுவை அறுமையாக இருந்தது.
நன்றி அம்மா!

ப்ரீதா

ப்ரீதா

அன்பு ப்ரீதா,
இரண்டாவது முறை செய்யும் அளவுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஓ! சிக்கனில் கூட நானும் செய்து பார்க்கிறேன்.
பாராட்டுக்கு நன்றி டியர்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி உங்கள் bread balls ரொம்ப அருமை..
நல்லா மொறு மொறுனு இருந்தது..
என்னுடைய hubby ரொம்ப பிடித்துவிட்டது..

thanks for ur delicious recipe

indrae sei nandrae sei

ஹாய் ஹனுகி,
அதே சாரி, அப்படியா? உங்க ஹஸ்ஸுக்கும் பிடித்ததா? ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.