உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

ஸ்டஃடு பிரெட் பஜ்ஜி

 

பிரட்டை வெறுமனே கட் செய்து பஜ்ஜி மாவில் முக்கி போடுவதை விட, இது வித்தியாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • ஸ்டஃபிங்க்கு:
  • -----------------
  • பிரெட் - 6 ஸ்லைஸ்,
  • உருளைகிழங்கு - 2 (வேக வைத்தது),
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
  • பெரிய வெங்காயம் - 1,
  • கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது),
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி,எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
  • உப்பு - தேவையான அளவு,
  • பஜ்ஜிக்கு:
  • ------------
  • கடலை மாவு - 200 கிராம்,
  • அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி,
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
  • பெருங்காயம் - சிறிது,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - பொரிக்க.

செய்முறை

  • பிரெட் ஸ்லைஸை முக்கோணமாக நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும்.
  • உருளைக்கிழங்கை உதிர்த்து போட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
  • கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து திக்காக பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்.
  • பிரட் ஸ்லைஸ் மேல் உருளைகிழங்கு கலவையை பரவலாக வைத்து இன்னொரு ஸ்லைஸால் மூடி, கடலை மாவு கலவையில் முக்கி, எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு:

மாலை நேரத்தில், சாப்பிட சுவையான சிற்றுண்டி. கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னியுடன் சாப்பிட ருசி அதிகரிக்கும்.

வழங்கியவர்

இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

சாப்பிடுபவர்களின் ருசியை பொறுத்து 15 நிமிடங்கள்.
  random food image


comments