தேவையானப் பொருட்கள்
- துவரம் பருப்பு - நூரு கிராம்
- பருப்பு கீரை - ஒரு கட்டு
- வெங்காயம் - இரண்டு
- தக்காளி - ஒன்று
- பச்ச மிளகாய் - ஒன்று
- சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி ( 5 கிராம்)
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- தாளிக்க
- -------
- எண்ணை - ஒரு தேக்கரண்டி
- சீரகம் - கால் தேக்கரண்டி
- மிளகு - முன்று
- உளுந்து - அரை தேக்கரண்டி
- கருவேப்பிலை - சிறிது
- பூண்டு -இரண்டு பல்
- நெய் - அரை தேக்கரண்டி
செய்முறை
- பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக
- வைக்கவும்.
- கீரையை ஆய்ந்து மணில்லாமல் அலசி தண்ணீரை வடிகட்டவும்.
-
- எண்ணையை கயவைத்து அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- பிறகு தக்காளி சேர்த்து சாம்பார் பொடி,உப்பு சேர்த்து வதக்கி கீரையை சேர்த்து வத்தக்கி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம்வேகவிடவும்.
- வெந்ததும் வெந்து வைத்துள்ள பருப்பு சேர்த்து நெய்யும் சேர்த்து கிளறி கொதிக்க விட்டு இரக்கவும்.
-
- இதற்கு தேங்காய் தேவையில்லை.
-
-
-
-
-
குறிப்பு
இதை எந்த கீரையில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
3 (அ) 4 நபர்களுக்கு |
10 நிமிடம் |
10 நிமிடம் |