உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

கருவாட்டுக் குழம்பு

 


தேவையானப் பொருட்கள்

  • புளி-1 எலுமிச்சை அளவு
  • 100 கிராம் மொச்சைக் கொட்டை-பச்சைப் பயிறு அல்லது காய்ந்தது
  • கத்தரிக்காய்-5 அல்லது 6
  • வெங்காயம்-100 கிராம்
  • தக்காளி-100 கிராம்
  • கருவாடு-100 கிராம்
  • குழம்புப் பொடி-4 டீஸ்பூன்
  • தாளிக்க
  • கடுகு-2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு-2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்-6
  • வெந்தயம்-1/2 டீஸ்பூன்
  • பெருங்காயம்-1 டீஸ்பூன்
  • பட்டை-2
  • கிராம்பு-4
  • எண்ணெய்-1/2 கப்

செய்முறை

  • ஒரு கனமான வாணலியில், எண்ணெயை காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தாளிப்பு சாமான்களை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கிய பின், கத்தரிக்காய் மொச்சைக் கொட்டையையும் போட்டு வதக்கவும். பின் புளியையும் கரைத்து விட்டு, உப்பு, குழம்புப் பொடி போட்டுக் கொதிக்க விடவும்.
  • தளதளவென்று கொதி வந்தவுடன் நன்றாகக் கழுவிய கருவாட்டையும் போட்டுக் கொதிக்கவிட்டுப் பின் நன்றாக ஒரு சேர கொதித்தவுடன் பரிமாறவும்.

வழங்கியவர்

குலசை சுல்தான், சென்னை

random food image


comments
ஹலோ சுல்தான் அங்கிள்
மார்ச் 14, 2008 - 3:43am - வழங்கியவர் அதிரா

ஹலோ சுல்தான் அங்கிள்
குறிப்பெல்லாம் எழுதிக் கலக்கிறீங்க. உண்மையில் நீங்க எஞ்சினியரா அல்லது சமையல்காரரா என்றுதான் சந்தேகமாக இருக்கு...( ஐயோ பகிடிக்கு, கோபிக்கவேண்டாம்)
கருவாட்டுக் குழம்பு பார்க்கவே ஆசையா இருக்கு. அது என்ன பொடி என்றால் கறித்தூளா அல்லது ஏதாவது ஸ்பெசல் தூளா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா!
மார்ச் 14, 2008 - 3:52am - வழங்கியவர் kulasaisulthan

சத்தியமா என்ஜினியர் தாங்கோ! சமையல் நம்ம சிறப்பு பொழுது போக்கு.அவ்வளவுதான். குழம்பு பொடி என்றால் சாதாரண மீன் குழம்பு பொடி தான்.
குறிப்பு: இப்போது இஸ்லாமிய சமுதாயப் பணி கொஞ்சம் செய்து வருகிறேன். புகாரி,முஸ்லிம் ஹதீஸ்களை இ.புக் காக தயாரித்து வருகிறேன்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி காண்பாய்....

அங்கிள் எனக்கு
மார்ச் 14, 2008 - 3:58am - வழங்கியவர் அதிரா

அங்கிள் எனக்கு சந்தேகமே இல்லை சும்மாதான் கேட்டேன். எனது அக்காவின் கணவரும் எஞ்சினியர்தான். அக்காவைவிட திறமாகச் சமைப்பார்.
உங்கள் சமயப்/ சமையல் பணிகள் தொடர எனது வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மீன் குழம்பு பொடியா
மார்ச் 14, 2008 - 4:00am - வழங்கியவர் thalika

சுல்தானண்ணா மீன் குழம்பு பொடியா அப்படின்ன்னா?ஜும்மா முடிஞ்சு வீடு வந்து சேந்துட்டீங்களா

தளிகா!
மார்ச் 14, 2008 - 4:09am - வழங்கியவர் kulasaisulthan

ஆம். இபோது தான் ஜூம்மா முடிந்து வந்து, சோற்றுடன், சாலை மீன் குழம்பு, பொறித்த சாலை மீன் சாப்பிட்டு விட்டு நெட் டில் அமர்ந்தேன்.
மீன் குழம்புக்கு என்று தனியாக மசலா அரைத்து வைத்திருப்பார்களே,அந்த பொடி தான். பொடி பற்றி விளக்கமாக பிறகு தருகிறேன்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

மீன் குழம்பு மசாலா (தளிகா,அதிரா)
மார்ச் 14, 2008 - 4:47am - வழங்கியவர் kulasaisulthan

மீன் குழம்பு மசாலா பொடி அரைத்து வைத்துக் கொள்ள:
1 கிலோ மல்லிக்கு, வற்றல்-300கிராம்,மஞ்சள்-50 கி,சீரகம்-100கி,சோம்பு-50கி, இவற்றை கொஞ்சம் காய வைத்து நன்றாக (dry grinder)
அரைத்து வைத்துக் கொண்டால், மீன்,கருவாட்டுக் குழம்புகளுக்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

நன்றி அங்கிள்
மார்ச் 14, 2008 - 5:32am - வழங்கியவர் அதிரா

நன்றி அங்கிள். இது கிட்டதட்ட இலங்கை கறித்தூள்தான்.
--வீழ்வது வெட்கமல்ல, வீழ்ந்து கிடப்பதுதான் வெட்ககரமானது--

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கருவாட்டுக் குழம்பு,
மே 8, 2008 - 3:33am - வழங்கியவர் அதிரா

அங்கிள் உங்கள் இந்தக் குழம்பு நேற்றுச் செய்தேன். மிகவும் அருமை. ஆசையில் நிறைய சாப்பிட்டு விட்டேன். மொச்சைக்கொட்டை- பச்சைப்பயறென்றால் , பச்சை நிறத்திலுள்ள அவித்து சாப்பிடும் பயறு தானே. நான் அது மட்டும் சேர்க்கவில்லை. படம் எடுத்தேன். எங்கள் அட்மின் வந்ததும் இணைப்பார்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கருவாட்டுக் குழம்பு
மே 10, 2008 - 3:07am - வழங்கியவர் admin

சகோதரி அதிரா அவர்கள் இந்த குறிப்பின்படி செய்துள்ள கருவாட்டுக் குழம்பின் படம்

Dry fish gravy

சுல்தான் அங்கிள்
மே 12, 2008 - 7:03am - வழங்கியவர் அதிரா

நீங்கள் இதை இவ்வளவு நாளாகப் பார்க்கவில்லையா?
கூட்டாஞ்சோறில் குறிப்புகள் அனுப்புவதே கஸ்டம், அதைப்பார்த்து பொருட்கள் வாங்கி சரிவர செய்து சுவையாக எடுப்பது அதைவிடக் கஸ்டம், எடுத்ததை அழகாக படமெடுத்து எங்கள் அட்மினுக்கு அனுப்புவது கொஞ்சம் கஸ்டம்..... அதை அவர் தனது கடமையாக நினைத்து, தன் வேலைகளுக்கு மத்தியில் இங்கே இணைக்கிறார்... அது எவ்வளவோ கஸ்டம்.... இப்படியாக வந்த பதிலை... படத்தைப் பார்த்த பின்பும் ஏதும் பதில் கூறாமல் இருக்கிறீங்களே இது ஞாயமா?

காசா... பணமா... ஒரு பதில்தானே .... போட்டால் , குறிப்பு தந்த உங்களுக்கும் திருப்தி... அதைச் செய்யும் எங்களுக்கும் ஒரு சந்தோசம் கிடைக்குமே.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஐயோ sorry அதிரா
மே 12, 2008 - 7:34am - வழங்கியவர் kulasaisulthan

ஐயோ இப்போதான் பார்த்தேன். ரெம்ப நன்றி அதிரா! என் குறிப்புக்கு மகுடம் சூட்டி விட்டீர்கள் அருமையான படத்தினை கொடுத்து....
ரெம்ப ரெம்ப நன்றி.
படங்களாக அனுப்பி தூள் கிளப்புகிறீர்கள். வாழ்த்துக்கள்.
குலசை சுல்தான்

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

பறவாயில்லை அங்கிள்
மே 13, 2008 - 3:56am - வழங்கியவர் அதிரா

பறவாயில்லை அங்கிள்,
ஏன் நீங்கள் இதைக் கவனிக்கவில்லை என்றுதான் கொஞ்சம் கவலையாக இருந்தது. அவ்வளவுதான். இப்போது உங்களுக்கும் சந்தோசம்தானே..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்