காய்கறி சாம்பார் சமையல் குறிப்பு - படங்களுடன் - 7854 | அறுசுவை


காய்கறி சாம்பார்

வழங்கியவர் : Jaleela Banu
தேதி : செவ்வாய், 11/03/2008 - 16:46
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
0
No votes yet
Your rating: None

அறுசுவையில் 300க்கும் அதிகமான சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலிலா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

 

 • பீன்ஸ் – ஆறு
 • கேரட் – ஒன்று
 • பாகற்காய் – ஒன்று (சிறியது)
 • அவரைக்காய் – நான்கு
 • முருங்கைக்காய் – ஒன்று
 • சாம்பார் வெங்காயம் – பத்து
 • தக்காளி – ஒன்று
 • பச்சைமிளகாய் – இரன்டு
 • உப்பு – தேவைக்கு
 • சாம்பார் பொடி – ஒரு மேசைக்கரண்டி
 • வெல்லம் – சிறுதுண்டு
 • துவரம் பருப்பு - முக்கால் டம்ளர்
 • புளி – ஒரு எலுமிச்சை அளவு
 • கொத்துமல்லி தழை – சிறிது கடைசியில் தூவ
 • நெய் – ஒரு தேக்கரண்டி
 • அரைத்து கொள்ள
 • தக்காளி – ஒன்று
 • சாம்பார் வெங்காயம் – ஐந்து
 • பூண்டு – இரண்டு பல்லு
 • கறிவேப்பிலை – சிறிது
 • தாளிக்க
 • எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
 • கடுகு- ஒரு தேக்கரண்டி
 • சீரகம் – அரை தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் – ஒன்று
 • வெந்தயம் - ஐந்து
 • பூண்டு – ஒரு பல்லு
 • கறிவேப்பிலை – சிறிது

 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். துவரம் பருப்பை வேக வைத்து மசித்து தனியே வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றாய் சேர்த்து அரைக்கவும். (தக்காளி, சாம்பார் வெங்காயம், கருவேப்பிலை, பீன்ஸ்)

கேரட், பாகற்காயை வட்டவடிவமாகவும், பீன்ஸை நான்காகவும், அவரைக்காயை மூன்றாகவும், முருங்கைக்காயை ஒரு விரல் நீளத்துக்கும்,சாம்பார் வெங்காயத்தினை முழுதாகவும், தக்காளியை நான்காகவும் அரிந்து கொள்ளவும். புளியை ஒரு டம்ளர் மிதமான வெந்நீரில் ஊறவைத்து கரைத்து வைக்கவும்.

எண்ணெய் சட்டியை காய வைத்து அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.

அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.

ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

அத்துடன் மசாலாக்களை போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து கிளறி புளி தண்ணீரையும் ஊற்றி, வெல்லத்தையும் சேர்த்து மூடி போட்டு தீயை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.

பச்சை வாடை போன பிறகு மசித்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும்.

இறக்குவதற்கு முன்பு சிறிது கொத்துமல்லி தழை, நெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி கலக்கவும். இப்போது சூடான, சுவையான கலந்த காய்கறிகள் சாம்பார் ரெடி.

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..எனக்கு ஒரு சந்தேகம்

இதில் பாகற்க்காய் சேர்த்தால் கச்ப்பு தெரியுமா? எனக்கு வெல்லம் போட பிடிக்காது அதானால் தான் கேட்டேன்.

கசப்பு தெரியாது.....

மிக்ஸ்ட் காய் கறியில் சாம்பார் செய்தால் .. கசப்பு தெரியாது. உதாரணமாக... கத்தரிகாய் + பாவகாய்... பாவகாய்+ குடமிளகாய் .... பாவகாய்+ கேரட் .... பாவகாய்+முருங்கைகாய்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

விஜி TVM(கசப்பு தெரியாது)

விஜி TVM
ஒரு பிட்டு வெல்லம் சேர்த்து ஒரு முறை சமைத்து பருங்கள்.
இது டேஸ்ட் தூக்கலாக இருக்கும்.
புளி குழம்புகளில் ஒரு பிட்டு வெல்லம் சேர்த்தால் சுவை அதிகம் நீங்க என்ன நிறையவா போட போறீங்க ஒரு சிறிய பிட்டு அரை இன்ச் அளவு அல்லது ஒரு இன்ச் அளவு சமைத்து பருங்கள்.
பாகற்காய் சாம்பாரில் சேர்த்தால் கசப்பு தெரியாது சாப்பிடும் போது கூட அவ்வளவா தெரியாது.
குழந்தைகள் காய் சாப்பிடவில்லை என்ற கவலை வேண்டாம்.
முடி போட்டு வேகவைக்கும் போது அதை உள்ள ஜுஸ் அனைத்தும் கிரேவியில் இரங்கி விடும்.
நல்ல குழைவா சாத்ததில் போட்டு கொழு கொழு ஊற்றி ஊட்டி விடுங்கள்.
என் சின்ன பையனுக்கு ஹோட்டல் சாம்பாரை விட நான் வைக்கும் சாம்பார் தான் ரொம்ப பிடிக்கும்.
வாரம் ஒரு முறை கண்டிப்பாக செய்வேன்.
ஜலீலா

Jaleelakamal

jaleelakka

~~~~~முடி போட்டு வேகவைக்கும் போது அதை உள்ள ஜுஸ் அனைத்தும் கிரேவியில் இரங்கி விடும்~~~

உண்மை தான் அக்கா,முடி போடாம மூடி போடனும்,சரியாக்கா?

ஹாய் ப்ரண்ட்ஸ் & ஜலீலா மேடம்

இன்னக்கி உங்களோட இந்த காய்கறி சாம்பார் தான், வீக் என்டா காய்கள் எல்லாம் சரி ஆகிடுச்சி இருக்கிறத வச்சி உங்க காய்கறி சாம்பார் செய்ய போறேன். எல்லாம் ரெடி பண்ணிட்டேன். தோ செய்ய போகிறேன். செய்துட்டு வரேன் மேடம் வந்து சொல்றேன் எப்படி வந்துச்சுன்னு.

ஜலீலா மேடம்

சாப்பிட்டாச்சு சூப்பர் காய்கறி சாம்பார். கொஞ்சமா தான் மேடம் செய்தேன். ரொம்ப நல்லா வந்திருந்துச்சு. நன்றி மேடம் ரொம்ப. இன்னக்கி ஒரு புது ரெசிபி கத்துகிட்டேன். ரொம்ப சத்துள்ளது, இல்ல மேடம்.

அன்புள்ள நந்தினி

அன்புள்ள நந்தினி செய்து கொண்டேபதிவு போட்டதற்கும், செய்து விட்டு மகிழ்ச்சியுடன் பதில் போட்டதற்கும் மிக்க நன்றி.நான் எப்போதும் இப்படி தான் செய்வேன் , இந்த காய் கறி தான் இல்லை கூட சோளமணி, பட்டாணி, முல்லங்கி,பூசனி எதுவேண்டுமானாலும் போடலாம்.
ஆனால் முருங்கக்காய் சாம்பார் செய்யும் போது எவ்வளவு தேவையோ அதை போட்டு விட்டு இரண்டு துண்டை எடுஹ்ட்து நாலா குருக்கில் அரிந்து போட்டால் வாசனை கம கமன்னு இருக்கும்.

ஜலீலா

Jaleelakamal

சங்கீதா தேட வேண்டாம்

இந்தாங்க சங்கீதா தேட வேண்டாம்
காய்கறி சாம்பார்,

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா மேடம்

ஜலீலா மேடம்,

உங்க பதில் பார்த்தேன்.நன்றி...
நாளைக்கு எனக்கு விடுமுறை.. நாளைக்கு உங்க சாம்பார்தான்...செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்..எனக்கும் சாம்பார் வைக்க வருதான்னு :-)

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

காய்கறி சாம்பார்

ஜலீலா அக்கா உங்க காய்கறி சாம்பார் ரொம்ப நல்லா இருந்தது நான் எப்பவும் ஒரு காய் மட்டும் தான் போட்டு சாம்பார் பன்னுவேன், இதுலே எல்லா காயும் இருக்குது...என் பொண்னும் இஸியா சாப்புட்டுடா ...ரொம்ப நல்லா இருந்தது அக்கா

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).