தேவையானப் பொருட்கள்
- உரித்த பூண்டு-ஒரு கோப்பை
- எலுமிச்சை சாறு-அரைக்கோப்பை
- உப்பு-இரண்டு மேசைக்கரண்டி
- எண்ணெய்-கால்க் கோப்பை
- மிளகாய்த்தூள்-கால்க் கோப்பை
- மஞ்சத்தூள்-ஒரு தேக்கரண்டி
- பெருங்காயத்தூள்-ஒருதேக்கரண்டி
- கடுகு-ஒன்னரை தேக்கரண்டி
- வெந்தயம்-ஒரு தேக்கரண்டி
- சீரகம்-அரைத்தேக்கரண்டி
- கறிவேப்பிலை-ஒரு கொத்து
- இஞ்சி-ஒரு அங்குலத்துண்டு.
|
செய்முறை
- பூண்டு சிறிய பற்களைக் கொண்டதாக தேர்வுச் செய்துக் உரித்து வைக்கவும், கழுவ வேண்டாம் தண்ணீர் படக்கூடாது.இஞ்சியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிவைக்கவும்.
- சுத்தமான பீங்கான் குப்பி அல்லது செராமிக் ஜாடியில் உரித்த பூண்டுகளப் போட்டு உப்பைச் சேர்த்து கலக்கவும்.
- பிறகு எலுமிச்சைச் சாற்றை அதில் சேர்த்து கலக்கி மூடி வைத்து, குறைந்தது இரண்டு நாளைக்கு ஊறவிடவும்.
- பின்பு ஊறுகாயை தாளிக்கும் நாளில் மிளகாய்த்தூளைச் சேர்த்து நன்கு கலக்கவும்,காரம் மேலும் தேவையென்றால் மேலும் சேர்த்துக் கொள்ளலாம்.
- சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகைப் போட்டு நன்கு பொரியவிடவும்,பின்பு சீரகம் வெந்தயத்தைச் சேர்த்து சிவக்க வறுபட்டவுடன் மஞ்சத்தூள், பெருங்காயத்தூளைச் சேர்த்து கலக்கவும்.
- தொடர்ந்து இஞ்சி மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு உடனே பூண்டு கலவையைக் கொட்டி கிளறி அடுப்பை நிறுத்திவிடவும்.
- அப்படியே சட்டியிலேயே ஊறுகாயை நன்கு ஆறவிட்டு மீண்டும் குப்பியில் போட்டு மூடிவைக்கவும்.ஒரு வாரம் கழித்து பயன்படுத்தினால் சுவை கூடியிருக்கும்.
|
குறிப்பு:
எந்த ஊறுகாயின் மீதும் எண்ணெய் நிற்குமாறு இருந்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
வழங்கியவர்
மனோகரி
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
இரண்டு நாட்கள் |
ஐந்து நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 47 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 40 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
43 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
47 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
58 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -