உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

தால் வித் ஆப்பில் சூப் (குழந்தைகளுக்கு)

 

ஆறுமாத குழந்தைகளில் இருந்து இந்த சூப்பை கொடுக்கலாம். தெம்பில்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு பருப்பும், ஆப்பிலும் நல்ல எனர்ஜியை தரும்.

தேவையானப் பொருட்கள்

  • துவரம் பருப்பு - ஐம்பது கிராம்
  • ஆப்பில் - ஒன்று
  • வெங்காயம் - இரன்டு
  • முழு மிளகு - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • பட்டர் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • துவரம்பருப்பை களைந்து ஐந்து நிமிடம் ஊறவைகவும்.
  • ஆப்பில், வெங்காயத்தை பொடியாக கட் பண்ணவும்.
  • குக்கரில் பட்டரை உருக்கி அதில் வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கவும்.
  • பிறகு முழு மிளகு,பருப்பு,ஆப்பில் ,உப்பு போட்டு நன்கு வதக்கி ஐந்து கப் தண்ணீர் ஊற்றி தீயை மிதமாக வைத்து முன்று விசில் வந்ததும் தீயை சிம்மில் வைத்து பத்து நிமிடம் விடவும்.
  • பிறகு நன்கு மசித்து வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

குறிப்பு:

இதில் பெரியவர்களுக்கு என்றால் கொஞ்சமா இஞ்சி பூண்டு, வொயிட் சாஸ் சேர்த்து செய்யவும், முழுமிளகு போடாமல் தேவைக்கும் பெப்பர் பொடி போட்டு கொள்ளவும்

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

நான்கு குழந்தைகளுக்கு 10 நிமிடம் 15 நிமிடம்
random food image


comments