ஆறுமாத குழந்தைகளில் இருந்து இந்த சூப்பை கொடுக்கலாம். தெம்பில்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு பருப்பும், ஆப்பிலும் நல்ல எனர்ஜியை தரும்.
தேவையானப் பொருட்கள்
- துவரம் பருப்பு - ஐம்பது கிராம்
- ஆப்பில் - ஒன்று
- வெங்காயம் - இரன்டு
- முழு மிளகு - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- பட்டர் - ஒரு தேக்கரண்டி
செய்முறை
- துவரம்பருப்பை களைந்து ஐந்து நிமிடம் ஊறவைகவும்.
- ஆப்பில், வெங்காயத்தை பொடியாக கட் பண்ணவும்.
- குக்கரில் பட்டரை உருக்கி அதில் வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கவும்.
- பிறகு முழு மிளகு,பருப்பு,ஆப்பில் ,உப்பு போட்டு நன்கு வதக்கி ஐந்து கப் தண்ணீர் ஊற்றி தீயை மிதமாக வைத்து முன்று விசில் வந்ததும் தீயை சிம்மில் வைத்து பத்து நிமிடம் விடவும்.
- பிறகு நன்கு மசித்து வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
-
-
-
-
-
-
-
குறிப்பு
இதில் பெரியவர்களுக்கு என்றால் கொஞ்சமா இஞ்சி பூண்டு, வொயிட் சாஸ் சேர்த்து செய்யவும், முழுமிளகு போடாமல் தேவைக்கும் பெப்பர் பொடி போட்டு கொள்ளவும்
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
நான்கு குழந்தைகளுக்கு |
10 நிமிடம் |
15 நிமிடம் |