Oven சிக்கன் கறி

தேதி: March 12, 2008

பரிமாறும் அளவு: 4 - 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - ஒரு கிலோ
தயிர் - 4 மேசைக்கரண்டி
தனி மிளகாய்த்தூள் - 3/4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று (பெரியது)
எலுமிச்சை - பாதி பழம்
உப்பு - தேவையான அளவு


 

சிக்கனை சுத்தம் செய்து, பெரிய சோயாமீற் துண்டுகள் அளவிற்கு வெட்டிக்கொள்ளவும். (எலும்புடன்).
தயிர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு (தேவைக்கு ஏற்ப) போட்டு பிரட்டி 20 - 30 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.
வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
அவன் (tray)தட்டில் (or cake tray) அலுமினிய பேப்பர் (foiling sheet)விரித்து அதனுள் ஊறவைத்த சிக்கனை போட்டு பரவி வெங்காயத்தை மேலே தூவிவிடவும்.
அவனை 450 பாகை F ல் போட்டு சிக்கனை வைத்து விடுங்கள். அரை மணித்தியாலங்களின் பின் பார்த்தால் வெங்காயம் பொரிந்தது போல் இருக்கும். அதன்பின் மெதுவாக எல்லாவற்றையும் பிரட்டி விடுங்கள்.
மீதி அரை மணித்தியாலங்களும், இடையிடையே அவனைத் திறந்து பிரட்டி விடவும்.
மொத்தமாக ஒரு மணித்தியாலத்தில். சிக்கன் கறி தயார். பிரட்டல் கறி தேவையெனில் இன்னும் கொஞ்ச நேரம் அவனிலேயே வைத்து விடுங்கள்.


குளிர்சாதனப் பெட்டியால் எடுத்த சிக்கனாயின் தானாகவே தண்ணீர் வரும். உடனேயே கடையில் வாங்கிய சிக்கனாக இருந்தால், ட்ரேயில் போடுகிற போது கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ஊற வைத்த பாத்திரத்தைக் கழுவி விட்டாலே போதும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அதிரா உங்களுடைய குறிப்பில் Oven சிக்கின் கறி மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"