ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

தேதி: March 13, 2008

பரிமாறும் அளவு: 5 - 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாஸ்மதி அரிசி - 1 கிலோ

மட்டன் - 11/2 கிலோ

நெய் 250 கிராம்

தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)

பூண்டு - 100 கிராம்

இஞ்சி - 75 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்

பெரிய வெங்காயம் - 1/2 கிலோ

தக்காளி - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 50 கிராம்

எலுமிச்சை - 1

பொதினா, கொத்தமல்லிதழை - கையளவு

கேசரிப்பவுடர் - சிறிதளவு

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்

பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்

நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்

பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்

கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்

தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்

குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்

கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்

கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்

நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.


பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

ungal briyani recipe piramatham,anal naan konjam milakai kuraithu,thakkali kooti poduven.ithuthan chinna vithiyasam.easy yellorukkum purihiramathiri cholli irukkeenga.
thanks.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்களுடைய இந்த குறிப்பைப் பார்த்தேன்.செய்ய வேண்டும் போல் இருக்கிறது.ஆனால் நாங்கள் மட்டன் சாப்பிடுவதில்லை.இதே செய்முறையில் சிக்கன் பயன்படுத்தி செய்யும் போது meat மற்றும் அரிசியின் விகிதம் இதையே பயன்படுத்தலாமா??

ஸ்ரீகீதா மகேந்திரன்

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........