கப்சா ரைஸ் - 2

தேதி: March 14, 2008

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி வறுக்க:
சிக்கன் - ஒரு கிலோ
மசாலா பொடிகள் - சீரகம், மல்லி தூள், குருமிளகுத் தூள் மூன்றும் அரை தேக்கரண்டி அளவு
இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது அரைத்தது - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் பொரிக்க (6 தேக்கரண்டி)
சாதத்திற்கு:
வெங்காயம் நீளமாக நறுக்கியது - 3
சிக்கன் ஸ்டாக் - 2 க்யூப்கள்
அரிசி - 4 கப் (6 கப் தண்ணீர்)
பட்டை - ஒரு இன்ச் துண்டு
ஏலக்காய் - 3
குடை மிளகாய் - 1/2 மிளகாயை சதுரமாக நறுக்கவும்
காய்ந்த எலுமிச்சைப்பொடி - அரை தேக்கரண்டி


 

அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து உலையில் இடும் பொழுது வடிக்கவும்.
கோழியில் வறுக்க கொடுத்த மசாலாக்களை கலந்து 2 மணிநேரம் ஊறவைத்து பின் அதனை எண்ணெயில் முக்கால் பாகம் வேகும் அளவு பொரித்து எடுக்கவும்.
பிறகு அதே எண்ணெயில் ஏலக்காய், பட்டை போட்டு வெடித்ததும் வெங்காயம் சேர்த்து உடையும் வரை வதக்கி அதில் குடைமிளகாயும் சேர்த்து வதக்கவும்.
அதில் சிக்கன் ஸ்டாக் சேர்த்து 6 கப் தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து வடித்த அரிசியை போட்டு கொதித்ததும் தீயை குறைத்து 20 நிமிடம் மூடியிட்டு வேக விடவும்.
பின் அதில் பொரித்த சிக்கன் தூண்டுகளை போடவும். மேலும் 15 நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.


இது ஒரு யெமெனி(yemeni) உணவு என்று சொல்லப்படுகிறது. இதை நான் காப்பி அடிச்ச குறிப்பே தான் ஆனால் மனசு கேட்காமல் கொஞ்சம் இந்தியன் ஸ்பைசெஸ் சேர்த்து இந்தியன் வெர்ஷனாக செய்து பார்த்தேன். சுவையாகவே இருந்தது. இதனுடன் உலையில் அரிசி சேர்க்கும் பொழுதே எலுமிச்சை பொடி சேர்க்க வேண்டும். ஆனால் அது ஒரு பாக்கெட் வாங்கி மீதமாகி வீணாகுமே என்பதால் கடைசியில் 1/2 எலுமிச்சையை அரிசியில் பிழிந்து பரிமாறினேன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சலாம் தளிகா நலமா..
நேற்று உங்க கப்சா ரைஸ் செய்தேன்..
அவ்வளவு சுவையாக இருந்தது.
என் பொண்ணு சாப்பிட்டால் அது தான் ஸ்பெஷல்............
நன்றி+வாழ்த்துக்கள்...
இன்றும் உங்க ரெசிபியை தான் அலசிக் கொண்டு இருக்கிறேன்...

ஹசீன்

கப்ஸா ரைஸ் சூப்பர்

vao exam எழுதப்போறிங்களா?யாராவது இதற்கு முன் exam எழுதிஇருக்கிங்களா?