உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ராயல் தக்காளி சூப்

 


தேவையானப் பொருட்கள்

  • தக்காளி அரைக் கிலோ
  • பெரிய வெங்காயம் 2
  • காரட் 1
  • உருளைக்கிழங்கு 1 (சிறியது)
  • சீஸ் 25 கிராம்
  • வெண்ணெய் 50 கிராம்
  • பால் 100 மி.லி
  • மிளகுத்தூள் அரைத் தேக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • தக்காளி, காரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை கழுவி சற்று பெரிய துண்டங்களாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தினையும் நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் வெண்ணெயை விட்டு அதில் வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  • வதக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள் இவற்றுடன் பால், துருவிய சீஸ் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில் இட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  • பிறகு இறக்கி ஆறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் மற்றும் சிறிதாய் எண்ணெயில் பொறித்த பிரட் துண்டங்கள் சேர்த்து சற்று சுட வைத்து அருந்தவும்.

வழங்கியவர்

குலசை சுல்தான்

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு 15 நிமிடங்கள்
random food image


comments
hello sultan sir,
மார்ச் 14, 2008 - 9:27am - வழங்கியவர் asiya omar

assalamu alaikum.your royal tandoori chicken,royal tomato soup,royal thal shows that you are an excellent chef.i took print out of the recipes.yours recipes are very rich in taste.
i ask my husband to down load tamil typing,he didnt find time,insha allah soon i will write in tamil.
thanka a lot.

ஹலோ ஆசியா
மார்ச் 14, 2008 - 9:39am - வழங்கியவர் அதிரா

ஹலோ ஆசியா, இங்கு தமிழில் எழுதுவதற்கு, எதுவுமே செய்யத் தேவையில்லை. இங்கே கீழே பாருங்கள் எழுத்துதவி என இருக்கிறது. அதைக் கிளிப் பண்ணுங்கள். அதை ஆறுதலாக வாசித்தாலே எல்லாம் புரியும். அங்கு இரு பெட்டிகள் உள்ளன. கீழே உள்ள பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதினால் மேலே உள்ள பெட்டியில் தமிழில் வரும். அதனை (CTRL + X) கட் பண்ணி இங்கே பதிலளியில் (CTRL + V ) பேஸ்ட் பண்ணூங்கள் அவ்வளவுதான். முயற்சி செய்யுங்கள் பார்ப்போம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சகோ.ஆஸியா!
மார்ச் 14, 2008 - 11:31am - வழங்கியவர் kulasaisulthan

அல்ஹம்துலில்லாஹ்.நன்றி.உங்களின
் பாராட்டுதலுக்கு. இஸ்லாமியப் பணிகளுக்கு இடையில் பொழுது போக்காக இந்த பணியும் புரிந்து வருகிறேன். புகாரி,முஸ்லிம் ஹதீஸ்களை தமிழில் கனிணீ புத்தகங்களாக வெளியிடும் முயற்சியில் கடந்த 1 வருடமாக ஈடுபட்டிருக்கிறேன். விரைவில் விபரங்கள் தெரிவிக்கிறேன்.

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

ஆதிரா நன்றி
மார்ச் 14, 2008 - 2:39pm - வழங்கியவர் asiya omar

ஆதிரா நன்றி.
எனக்கும் இப்பொழுது தமிழ் எழுத தெரியும்.கடினம் என்று நினைத்ததை எளி தாக்கிவிட்டீர்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

குலசை சுல்தான் அவர்களே,
மார்ச் 14, 2008 - 5:56pm - வழங்கியவர் asiya omar

உஙகளுடைய சீரிய பணிக்கு என் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
சகோ. ஆசியா உமர்.