www.arusuvai.com
ராயல் தக்காளி சூப்
தேவையானப் பொருட்கள்
- தக்காளி அரைக் கிலோ
- பெரிய வெங்காயம் 2
- காரட் 1
- உருளைக்கிழங்கு 1 (சிறியது)
- சீஸ் 25 கிராம்
- வெண்ணெய் 50 கிராம்
- பால் 100 மி.லி
- மிளகுத்தூள் அரைத் தேக்கரண்டி
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- தக்காளி, காரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை கழுவி சற்று பெரிய துண்டங்களாய் நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயத்தினையும் நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் வெண்ணெயை விட்டு அதில் வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- வதக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள் இவற்றுடன் பால், துருவிய சீஸ் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில் இட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- பிறகு இறக்கி ஆறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் மற்றும் சிறிதாய் எண்ணெயில் பொறித்த பிரட் துண்டங்கள் சேர்த்து சற்று சுட வைத்து அருந்தவும்.
பரிமாறும் அளவு
| சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
15 நிமிடங்கள் |