கத்தரிக்காய் சம்பல்

தேதி: March 14, 2008

பரிமாறும் அளவு: 6 - நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய கத்தரிக்காய் - 2
பால் - கால் டம்ளர்
(தேங்காய்பாலெனில் முதற்பால், பசுப்பால் எனில் whole milk (சூடாக்கி விடவும்))
தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
எலுமிச்சை - பாதி பழம்
வெங்காயம் - கால் டம்ளர்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவைக்கு


 

கத்தரிக்காய்களை பாதியாக வெட்டி மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து மூடி, அவியும் வரை அவிக்கவும்(7-10 நிமிடங்கள் எடுக்கும்). அடுப்புள்ளவர்கள் தணலில் சுட்டெடுக்கலாம்.
ஆறியதும் தோலை உரித்துவிட்டு, கத்தரிக்காயை சிறியதாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கவும். பச்சை மிளகாயின் விதையை நீக்கினால் நல்லது.
கத்திரிக்காயினுள் இதனைப் போட்டு கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின் உப்பு, பால், தேங்காய் பூ சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு கரண்டியால் ஒன்று சேர்க்கவும்.


விரும்பினால் கறிவேப்பிலை மெல்லியதாக அரிந்து போடலாம். இது சோறுடன் தான் சேரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கத்தரிக்காய் சம்பல் பால், தேங்காய்ப்பூ சேர்க்காமலும் செய்யலாம். நன்றாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

நான் இதுவரை அப்படிச் செய்து பார்க்கவில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,
கொஞ்ச நாளைக்கு முன் உங்கள் குறிப்பில் உள்ள மாதிரி சம்பல் செய்து பார்த்தேன். பிடித்திருக்கிறது. :)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அதிரா உங்களுடைய குறிப்பில் கத்தரிக்காய் சம்பல்
மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மிக்க நன்றி இமா, துஷியந்தி. இப்பொழுதுதான் எனக்குப் பார்க்க நேரம் கிடைத்திருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா..... என்ன அதிரா இத்தனை சுலபமான குறிப்பா குடுத்து வேலையை குறைக்கறீங்க. ;) நல்ல சுவையான குறிப்பு. ரொம்ப பிடிச்சது. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மிக்க நன்றி. வாய்க்கு நல்ல உறைப்புப் புளிப்பாக இருந்திருக்குமே... அதுசரி எல்லோரும் நல்ல இலகுவான குறிப்பையா தேடித்தேடிச் செய்கிறீங்க?... பறவாயில்லை நடக்கட்டும் நடக்கட்டும்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்