தேவையானப் பொருட்கள்
- கத்தரிக்காய் - 2 பெரிது
- பால் -1/4 டம்ளர்
- (தேங்காய்ப்பாலெனில் முதற்பால், பசுப்பால் எனில் whole milk(சூடாக்கி விடவும்))
- தேங்காய்ப்பூ - 3 மே.க
- எலுமிச்சை பாதி
- வெங்காயம் -1/4 டம்ளர்
- பச்சை மிளகாய் -3
- உப்பு
செய்முறை
- கத்தரிக்காய்களை பாதியாக வெட்டி மைக்ரொவேவ் பாத்திரத்தில் வைத்து மூடி, அவியும் வரை அவிக்கவும்(7 -10 நிமிடங்கள் எடுக்கும்)
- அடுப்புள்ளவர்கள் தணலில் சுட்டெடுக்கலாம்.
- ஆறியதும் தோலை உரித்துவிட்டு, கத்தரிக்காயை சிறியதாக வெட்டுங்கள்.
- வெங்காயம், பச்சை மிளகாயை சிறிதாக வெட்டுங்கள்.(ப.மிளகாயின் விதையை நீக்கினால் நல்லது)
- கதரிக்காயினுள் இதனைப் போட்டு கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- பின் உப்பு, பால், தே.பூ சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு கறண்டியால் ஒன்று சேர்க்கவும்
குறிப்பு
விரும்பினால் கறிவேப்பிலை மெல்லியதாக அரிந்து போடலாம். இது சோறுடன் தான் சேரும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
|
|
6 - நபர்கள் |
15-20 நிமிடங்கள் |