தேவையான பொருட்கள்
- மைதா - 1/2 கிலோ,
- நைசாக பொடித்த சர்க்கரை - 50 கிராம்,
- ஈஸ்ட் - 1 தேக்கரண்டி,
- உப்பு - 1 தேக்கரண்டி,
- வெண்ணெய் - 15 கிராம்.
|
செய்முறை
- மைதாவை நன்கு சலிக்கவும்.
- ஈஸ்டை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- சலித்த மைதாவை 3 பங்காக பிரிக்கவும்.
- பிரித்த மாவில் ஒரு பங்கை மட்டும் தனியாக எடுக்கவும்.
- அதில் ஈஸ்ட் ஊற வைத்த தண்ணீரை ஊற்றி, கெட்டியாக பிசைந்து மூடி, 10 மணி நேரம் ஊற விடவும்.
- 10 மணி நேரம் கழித்து, மீதமுள்ள இரண்டு பங்கு மைதாவுடன் உப்பு, சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
- இதனுடன் ஏற்கனவே புளிக்க வைத்த மாவை சேர்க்கவும்.
- இதனுடன் மேலும் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, 1 மணி நேரம் ஊற வைக்கவும் (பிசைந்த மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் தளர இருக்க வேண்டும்).
- ப்ரட் செய்யும் அச்சில் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் போட்டு, பாதி அச்சிற்கு பிசைந்த மாவை போட்டு, 1 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
- மாவு உப்பி, அச்சின் முழு அளவிற்கு வந்து விடும்.
- இதை அப்படியே அவனில் வைத்து, 400 டிகிரியில் 25 நிமிடம் பேக் செய்யவும்.
- 25 நிமிடம் கழித்து, பேக் செய்யப்பட்டதை அச்சிலிருந்து சூடு ஆறுவதற்கு முன் அப்படியே ஒரு தட்டில் கொட்டி விடவும் (ஆறினால் ப்ரட் அச்சுடன் ஒட்டிக் கொள்ளும்).
- ப்ரட் சூடாக இருக்கும் போதே, ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, ப்ரஷ்ஷால் தொட்டு, ப்ரட்டின் மேலே தடவினால், பளபளப்பாக இருக்கும் (முட்டை பிடிக்காதவர்கள் வெண்ணெய் அல்லது சுகர் சிரப்பை தடவலாம்).
|
வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
சாதாரண ப்ரட் அளவில் 4 வரும். |
12 மணி நேரம் |
25 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
28 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
42 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 39 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -