hai friends

நான் baby sampoo உபயோகித்து வருகிறேன் ஆனால் கண்டிசனர் போடுறதில்லை இதனால் soft இல்லை.எனக்கு எந்த கண்டிசனர் போட என்று குழப்பமாக உல்ளது அதேசமயம் nature லா இருக்கவிரும்புகிரேன்.இதற்க்கிடையில் பொடுகுதொல்லையில் லேசாகதலை அரிக்கிகவும் செய்கிறது.எதற்க்கு ஒரு வழி சொல்லுங்கலேன் please.

ஷாம்பூ பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் பொடுகு குறைய ஒரு யோஜனை சொல்கிறேன். டிரை பண்ணிப் பாருங்கள்.

நல்லெண்ணையை இரும்பு வாணலியில் விட்டு அதில் கொஞ்சம் வெல்லத்துண்டைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும். ஆறியதும் பாட்டிலில் விட்டுவைத்துக் கொள்ளவும்.

இந்த எண்ணையை தலையில் விட்டுத் தடவி சிறிது நேரம் ஊறிய பின் ஏதாவது ஷாம்பூ அல்லது சீயக்காய் தடவி குளிக்க பொடுகு போயே போயிந்தி.

செய்து பார்க்கவும். பிறகு கருத்தைத் தெரிவிக்கவும்.

"Always Keep Smiling"

"Always Keep Smiling"

நீங்க சொன்ன குறிப்பு நல்ல இருக்கு..மற்ற நிறைய குறிப்புகள் தெரிஞ்சு செய்ய கஷ்டம்..எல்லாம் தலையில் வாடை வரும் குறிப்புகள்.
இரும்பு வானலி இல்லை சாதா பாத்திரத்தில் இட்டு கொதிக்க விடவா..எண்ணையுடன் வெல்லம் கரையுமா?

நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் ஒரு இரும்பு சட்டி வாங்கிக் கொள்ளலாம். இல்லாத பட்சத்தில் காய் வதக்கும் கடாயில் செய்து கொள்ளுங்கள்

"Always Keep Smiling"

"Always Keep Smiling"

தந்களின் யோசனைக்கு நன்றி.
தங்கள் குறிப்பின் படி நல்லெண்ணெயில் வெல்லம் போட்டு காய்ச்சினென். வெல்லம் போட்ட பிறகு கலக்கவில்லை. எண்ணெய் ஆறியதும், வெல்லம் ஒரு கல்லுப் போல் இருந்தது. இப்படித்தான் இருக்குமா, அல்லது, எண்ணெய் காய்ச்சும் போது வெல்லத்தைப் போட்டு கலக்க வேண்டுமா? .
தளிகா தாங்கள் முயற்சி செய்துப் பார்தீர்களா?

வித்யா
வெல்லத்தை நல்ல தூளாக்கி நல்லெண்ணெயில் நல்ல காய்ச்சனும்.
பிறகு வடிகட்டி கொள்ளுங்கள்.வெல்லத்தை போட்டு அப்படியே விட்டால் கட்டியா கல்லு மாதிரி தான் ஆகும்.
ஒரு பேப்பரில் வைத்து நல்ல தூளாக்குங்கள்.பிற்கு எண்ணையில் போட்டு காய்ச்சவும்.
இது கண்டிப்பாக பொடுகு போய் விடும்.
ஜலீலா

Jaleelakamal

நல்ல வேலை சொன்னீங்க..இன்னைக்கு தான் நல்லெண்ணை வாங்கலாம்னு ட்ரெஸ் மாத்திட்டு சும்ம வந்து பாத்தேன்...சரி வெல்லத்தை கரைச்சு போடலாம்..எத்தனை வெல்லமும் எத்தனை எண்ணையும் சேர்த்து காய்ச்சனும் ஜலீலாக்கா/ராம்

அஸ்ஸ்லாமு அலைக்கும் தளிக்கா
இது கரெக்டாக தெரியல, நிறைய பேர் சொல்லி கேட்டுள்ளேன்,
ரமா வுக்கு தெரிந்தால் அளவு சொல்லட்டும்.
என் தங்கைகளுக்கு எல்லாருகும் பெண் குழந்தைகள். அவர்களுக்காக ஒவ்வொரு டிப்ஸா தேடி வைப்பது.
கொஞ்சமா செய்து பாருங்கள்.
நூரு மில்லி எண்ணிக்கு ஒரு இரண்டு டேபுள் ஸ்பூன் போட்டு பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

அடுத்த முறை காய்ச்சும் போது நீங்க கூறி இருப்பது போல் செய்கிறேன். இந்த முறையே பொடுகு கொஞ்சம் பராவாயில்லை.

மேலும் சில பதிவுகள்